பக்கம்:ஒரே இரத்தம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னன், தம்பி நந்தகுமாரை மெதுவாகத் தட்டி எழுப்பிப் பார்த்தான். நந்தகுமார் கண்விழித்து “பயப்படாதிங்க! ஒண்ணுமில்லை” என்று அம்மா, அக்காள், அண்ணன் மூவரையும் பார்த்துப் புன்னகை புரிந்து அவர்களின் அச்சத்தைப் போக்கினான். “மாரி! வர்ர வழியிலே நந்தகுமாரை ஒரு வண்டிக்காரப் பெரியவர் தடியால் ஓங்கித் தலையில் அடித்துவிட்டார். நந்த குமார் ரத்தம் கொட்டக் கீழே விழுவதற்கும், என் கார் அருகே வருவதற்கும் சரியாக இருந்தது! நான் உடனே இவனைத் தூக்கிக் கொண்டு ஒரு டாக்டர் வீட்டுக்குப் போயி, சிகிச்சை அளித்து அழைச்சிகிட்டு வந்தேன். ஆபத்து எதுவுமில்லை. டாக்டர் எதுக் கும் பயப்பட வேண்டாம்னு சொல்லி மருந்து கொடுத்திருக்கார். ஊசியும் போட்டிருக்கார். இந்தா மருந்து! " அந்த வாலிபனின் முன்னால் நடுங்கிக்கொண்டு நின்றிருந்த மாரி, நின்ற இடத்திலேயே தரையில் விழுந்து தண்டனிட்டு “சின்ன எஜமான்! எங்களை மன்னிச்சிடுங்க! எங்களுக்காக நீங்க எவ்வளவு பெரிய பாபத்தை செய்திருக்கீங்க! உங்க குல மென்ன, கோத்திரமென்ன? நீங்க போயி, என் மகனை கை தொட்டுத் தூக்கிறதா? காரிலே வச்சு அழைச்சுகிட்டு வர்ரதா?... இந்தப் பாவம் எங்களைத்தான் சுத்தும் எஜமான்!” - -என்று கண் கலங்கப் புலம்பத் தொடங்கினார். “நான் ஒண்ணும் சின்ன எஜமான் இல்லை! உன் மகன் பொன்னன் வயசுதான் ஆகுது எனக்கு! அதனால என்னை மகேஸ் வரன்னே கூப்பிடலாம்.” ‘“சிவா! சிவா! வேண்டாம் எஜமான்! பாபம்! பாபம்!' ‘எது மாரி பாபம்? தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததுக்காக இவன் வண்டியிலே ஏறக்கூட உரிமையில்லைன்னு தடியாலே அடிச்சு தலையை உடைக்கிறாங்களே; அதைவிடப் பெரிய பாபம் இருக்கா?” “பெரியவுங்க காலத்திலேயிருந்து வர்ர பழக்கமுங்க! சாஸ் திர சம்பிரதாயத்துக்கு விரோதமா நடக்கலாங்களா?” "LOITIN! உன்கிட்டே ஒரு வரியிலே எதையும் விளக்க முடியாது. கொஞ்சம் தண்ணி கொடுக்கச் சொல்லு!...” இப்படிச் சொல்லிக்கொண்டே மகேஸ்வரன் அந்த வீட்டுக் கட்டைத் திண்ணையில் உட்காருகிறான். தண்ணியா? வேண்டாம் எஜமான்; களுக்குத்தான் பாபம்!” வேண்டாம்! எங் ‘“சரி! இவ்வளவு கஷ்டப்பட்டு உன் மகனைக் காப்பாத்திகிட்டு வந்ததுக்கு, தண்ணிகூடத் தரமாட்டீங்களா?... நான் வர்ரேன். மகேஸ்வரன் எழுந்து காரை நோக்கிச் சென்றான். அதற்குள் செங்கமலம் செங்கமலம் வீட்டுக்குள்ளிருந்து தண்ணீர்க் குவளை யுடன் வாயிற்படிக்கருகே வந்தாள். மகேஸ்வரன் கார் புறப் படும் ஒலி கேட்டது. ' 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/27&oldid=1702182" இலிருந்து மீள்விக்கப்பட்டது