பக்கம்:ஒரே இரத்தம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கா ரின் ஒலியிலேயே கவனத்தைச் செலுத்தி ஒரு கணம் தன்னையும் மறந்து நின்றுவிட்ட செங்கமலம், தண்ணீர்க்குவளை யைத் திண்ணையில் வைத்துவிட்டு தம்பி நந்தகுமாரின் அருகே சென்றாள். அவனைச் சுற்றி மாரியும் அஞ்சலையும் பொன்னனும் செங் கமலமும் உட்கார்ந்து கொண்டனர். செய்தி பரவிய காரணத்தால் தெருவில் உள்ளவர்கள் மாரி வீட்டைச் சூழ்ந்துகொண்டு ஆவலுடன் முழுத் தகவலறிய முற் பட்டனர். நந்தகுமார் படுத்திருந்த சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். நிலையிலேயிருந்து கொஞ்சம் 'என்னப்பா நடந்தது? யாரப்பா உன்னை அடிச்சது? "யாரும் என்னை அடிக்கலே! ஜாதிக் கொடுமை என்னை அடிச்சது! 'அடிச்ச ஆளைச் சொல்லுடா! இப்பவே நாங்க படை திரண்டு போயி அவனைப் பிரியைக் கட்டி இழுத்துக்கிட்டு வர் ரோம்!” ஒரு முரட்டு மனிதன் மீசையை முறுக்கிக்கொண்டு கையி லிருந்த திருக்கை வாலையும் வீசிக் காட்டினான். ‘ஆள் யாருன்னு தெரியாது! தெரிஞ்சாலும் நான் சொல்லமாட்டேன். அடிச்சவர் மேலே என்ன குற்றம் இருக்குது? அவரா அடிச்சார்? அவரை அப்படி செய்யச்சொன்னது யாரு?" “யாருடா யாரு? சொல்லு, இப்பவே அவனைச் சுக்குநூறா ஆக்குறோம்! சுக்குநூறா ஆக்கவேண்டியது ஆளையல்ல மாமா! இந்த மாதிரி ஜாதிவெறியை நம்ப நாட்டிலே ரொம்ப காலத்துக்கு முன்னாடியே விஷ ஊசி மாதிரி போட்டு நம்ப தமிழ் சமுதாயத் 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/28&oldid=1702183" இலிருந்து மீள்விக்கப்பட்டது