பக்கம்:ஒரே இரத்தம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையே கெடுத்து வச்சிருக்கிற சாஸ்திரங்களையும் சம்பிரதாயங் களையும்தான் சுக்குநூறா ஆக்கணும்!” “பொன்னா! றான். உன் தம்பி பெரிய தத்துவமில்லே பேசு ‘“அதுக்குத்தானே அவனைப் படிக்க வச்சது! நம்ம இருட்டைத் தொலைக்க இந்த ஒரு விளக்கு போதாது. இன்னம் பல விளக்கு களை ஏத்தி வைக்கணும். கு “நீ சொல்றதும் சரிதான் பொன்னா! இருந்தாலும் நம்ப ஊர்லே நம்ப ஜாதியிலே இந்த ஒரு பிள்ளையாண்டான் படிச்சு, பெரிய உத்தியோகத்துக்குப் போன அது நமக்கெல்லாம் கௌர வம், பெருமைதானே!” ஒரு வயதானவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி மகிழ்ச்சி பொங்கி வழிந்திட இப்படிப் பேசினார். வலியையும் பொறுத்துக்கொண்டு நந்6 குமார் அவரை இடைமறித்தான். - 'தாத்தா! நீங்க நினைக்கிறதுதான் தப்பு! தாழ்த்தப்பட்ட வுங்க, பிற்படுத்தப்பட்டவுங்க முன்னேற்றம் என்றாலே அந்த ஜாதிகளிலே யாரோ நாலு பேரு படிச்சுப் பட்டம் பெறுவது! அவன் இரண்டு பேரு பெரிய உத்தியோகத்துக்குப் போறது! அதோட நம்ப முன்னேற்றம் முடிஞ்சு போகுது! அப்படிப் படிச்ச வன், பதவிக்குப் போனவன்; தான் பிறந்து வளர்ந்த சமூகங்களைத் திரும்பிப் பார்க்கிறானான்னா சத்தியமா கிடையாது! அவன் பட் டணத்திலே வேலை பாத்துகிட்டு, ஏதாச்சும் ஒரு பதவியில இருந்து கிட்டு, தன்னையும் உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவலா ணிக்கிறானே தவிர அவனாலே சமூகத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன்கூடக் கிடையாது. அதனால தான் சொல்றேன். யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் படிச்சா போதும்னு இல்லாம நம்ப எல்லா வீட்டுப் பிள்ளைகளும் படிக்கணும். பண் ‘“பேரப் பையன் என்ன போடு போடுறான் பாத்தியா! அது சரிடா கண்ணு! நம்ப எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டா அப் பறம் நிலத்தை உழுறது யாரு? பயிர் பண்றது யாரு? அப்பறம் உலகம் என்ன ஆவுறது? "தாத்தாவுக்கு உலகம் இந்த அஞ்சாறு கிராமத்து எல்லை யோட முடிஞ்சு போச்சு! தாத்தா! உலகம் ரொம்பப் பெரிசு! நம்ப கிராமம் மாதிரி பல லட்சம் கிராமங்களைக் கொண்டது நம்ப நாடு! அதாவது இந்தியான்னு சொல்றோமே அது! இந்தியா மாதிரி பல தேசங்கள் இருக்கு உலகத்திலே! அங்கேயெல்லாம் படிச்சவன் உழவு வேலை பாக்கக்கூடாதுன்னோ அல்லது உழவு வேலை பாக்கிறவன் படிச்சிருக்கக்கூடாதுன்னோ ஒண்ணுமில்லை! ஏதோ நம்ப நாட்டிலே தாழ்த்தப்பட்டவுங்களுக்கும் பின் தங்கிய வுங்களுக்கும் சில தியாகத் தலைவர்கள் பாடுபட்டு காலமெல்லாம் உழைச்சாங்க! அந்த உழைப்பைப் பயன்படுத்திக்கிட்டு நம்ப 29 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/29&oldid=1702184" இலிருந்து மீள்விக்கப்பட்டது