பக்கம்:ஒரே இரத்தம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சரி! சரி! இவன் இப்பவே இந்தக் கூட்டத்திலேயே பேச ஆரம்பிச்சுட்டான். அஞ்சலை! அம்மா செங்கமலம்! இவனை உள்ளே அழைச்சிகிட்டு போயி கயத்து கட்டில்லே ஒரு பாயை விரிச்சி படுக்க வைங்க!'’ மாரியின் இந்த முடிவுரையுடன் நந்தகுமாரின் பிரசங்கம் முடிவுற்றது. திண்ணைப் தெருவில் உள்ளவர்கள் பொன்னன் முதுகைத் தட்டிக் கொடுத்து 'உன் தம்பி சரியான சுட்டியா இருக்கிறான்ப்பா! எதிர் காலத்திலே பெரிய ஆளா வருவான் பாரு!” என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.. பொன்னன், தம்பிக்குக் கிடைத்த பெருமையை நினைத்துப் பூரித்துப் போனான். அந்த நினைவுடன், அவன் விடியற்காலை வயல் வெளியில் பார்த்த அந்தக் குழந்தை, அதன் பிறகு கிடைத்த சுருக்குப் பை ஆகியவற்றின் நினைவும் இணைந்துகொண்டது. வயலில் கண்டெடுத்த குழந்தையை வீட்டில் சேர்க்கும் விழா மிக விமரிசையாகப் பண்ணையார் வீட்டில் நடந்து கொண் டிருந்தது. பத்துப் பதினைந்து புரோகிதர்கள் ஓமகுண்டத்தைச் சுற்றி லும் உட்கார்ந்துகொண்டு மந்திரங்களை உச்சரித்துக்கொண் டிருந்தனர். குழந்தையும் அதுவரையில் உள்ளே எடுத்துச் செல் லப்படாமல் வெளித்தாழ்வாரத்திலேயே ஒரு தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. பண்ணையார் பரமேஸ்வரனும், அவர் மனைவி பார்வதியும் குரித்து முழுகிப் புத்தாடை உடுத்தி, ஓமகுண்டத்துக்கு அருகே உட்கார்ந்திருந்தனர் பக்தி சிரத்தையுடன்! திடீரெனப் பார்ப்பவர்களுக்கு, இருவருக்கும் அறுபதாங் கலியாணம் “சஷ்டியப்த பூர்த்தி' நடப்பதாகவே தோன்றும். - பண்ணையார் அறுபதை எட்டிப் பிடிக்க இன்னும் ஆண்டுகளே பாக்கி! பார்வதியம்மாளுக்கு நாற்பத்தி ஐந்து வயது இருக்கும். ஓரிரு நாற்பது அல்லது மணிவிழாவைவிட மிகுந்த ஆடம்பரத்துடன் குழந்தைக்குத் தீட்டுக் கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நந்தகுமாரை வீட்டில் விட்டுவிட்டு மகேஸ்வரன் காரை ஓட்டிக்கொண்டு வந்து பண்ணை யார் வீட்டு வாசலில் இறங்கினான். அவனுக்கே ஒரே திகைப்பு. தனக்குத் தெரியாமல் தன் வீட்டில் ஒரு வைபவம் நடப்பது அவனை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்குமா? விழிகளை அகல விரித்தவாறு வீட்டுப் படிக்கட்டுக்களில் அவன் ஏறினான். அதற்குள் பண்ணையாரின் கம்பீரமான குரல் எழுந்தது. 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/31&oldid=1702192" இலிருந்து மீள்விக்கப்பட்டது