பக்கம்:ஒரே இரத்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் மீதுள்ள பற்றின் ஆழத்தையும் உணர்ந்து மனத்துக்குள் ளாகப் பாராட்டிக் கொண்டனர். மகேஸ்வரன், மிகுந்த அமைதியுடன் உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் புதிய உடைகளை அணிந்துகொண்டு வெளியே வந்தான். அவனுடைய பார்வை அந்தக் குழந்தையின் மீது சென்றது. அருகிற் சென்று அந்தக் குழந்தையைக் கூர்ந்து கவனித்தான். அப்போது பூரணி ஜோடி மாடுகள் பூட்டிய வில் வண்டி யொன்று பண்ணையார் வீட்டுக்கு முன் வந்து நின்றது. அந்த வண்டியிலிருந்து ஒரு அழகான பெண் இறங்கினாள். “வந்துட்டியா காமாட்சி!’" என்று வாஞ்சை ததும்பிட அழைத்தவாறு வண்டியை நோக்கி ஓடினாள் பார்வதியம்மாள். என்னம்மா வீடே ஒரே விழாக்கோலமா இருக்கு! என்று கேட்டுக்கொண்டே காமாட்சி, தாழ்வாரத்திற்கு வந் தாள். « “அடேடே அண்ணனா, எப்ப வந்தீங்க?' அண்ணன் மகே சும், தங்கை காமாட்சியும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அண்ணனுக்கும் தங்கைக்கும் அந்தக் குழந்தை கிடைத்த கதையை பார்வதியம்மாள் விளக்கிக் கூறினாள். தது. ணீரை இதற்கிடையே மந்திரங்களின் ஒலி உச்சகட்டத்தை அடைந் மாவிலையிலும், தர்ப்பையிலும் தோய்க்கப்பட்ட தார்கள். தண் அந்தக் குழந்தையின் மீது புரோகிதர்கள் தெளித் பிறகு பார்வதியின் கையில் அந்தக் குழந்தையைத் தூக்கி பண்ணைக்காரர் கொடுத்தார். உயிரை 'இந்தாடியம்மா! நீதான் குழந்தைகள்னாவே விடுவே! இனிமே அடுத்த வீட்டுக் குழந்தைகளைத் தேடி அலைய மாட்டே! உனக்குக் கல்யாணமாகிற வரையிலே - இதோட விளை யாடு!’ என்று சிரித்துக்கொண்டே கூறி குழந்தையைக் காமாட்சி யின் கையில் கொடுத்தாள் பார்வதியம்மாள். கின. குழந்தையை வாங்கும்போது காமாட்சியின் கைகள் நடுங் 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/33&oldid=1702194" இலிருந்து மீள்விக்கப்பட்டது