பக்கம்:ஒரே இரத்தம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 செந்தாமரை மலர் மீது பொன்வண்டு அமர்ந்தது போல காமாட்சியின் கரங்களில் அந்தக் குழந்தை இருந்த காட்சியை மகேஸ்வரன் ரசித்தவாறு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு வேடிக் கையாகச் சொன்னான். "பரவாயில்லை. தங்கச்சிக்குக் கல்யாணமாகாமலே குழந்தை கிடைத்து விட்டது.' ஒரு மகேஸ்வரனின் சொற்கள் காமாட்சியின் முகத்தில் எண் ணற்ற மின்னல் கீற்றுக்களை உருவாக்கின. அசடு மாதிரி பேசாதேடா! ஒரு அண்ணன் தங்கச்சியைக் கேலி பண்ற அழகா இது? பட்டணத்துக்குப் போயி உத்யோகம் பாக்கிறதிலே இந்த நாரீகத்தைத்தான் கத்துக்கிட்டப் போலி ருக்கு!" பார்வதியம்மாள் தன் மகனைச் செல்லமாகக் கண்டித்த வாறு காமாட்சியின் கையில் இருந்த குழந்தையை ஆசையுடன் தடவிக் கொடுத்தாள். 'அப்பறம் என்னம்மா? காமாட்சிக்குக் கல்யாணம் ஆகலேங் கிறதும் உண்மை. இப்ப அவ கையிலே ஒரு குழந்தை இருக்கிற தும் உண்மை” என்று மீண்டும் தன் கேலிப்பேச்சைத் தொடர்ந்த மகேஸ்வரனிடம் பார்வதி கொஞ்சம் கடுகடுப்போடு ஆமாண்டா ஆமாம்! அதுக்கு யார் காரணம்? உங்கப்பாதான் வரதட்சணை யிலே கஞ்சத்தனம் காட்டுராரே! இல்லேன்னா எத்தனையோ எடத்திலேருந்து பெரிய பெரிய சம்பந்தமெல்லாம் வந்தது. உங்கப்பா மட்டும் அவுங்க கேட்ட வரதட்சணையைக் கொடுக்க சம்மதிச்சிருந்தா இந்நேரம் நான் பேரன் பேத்தி எடுத்திருப் பேன்" என்று பார்வதியம்மாள் தன் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள். நான் “வரதட்சணை விவகாரத்திலே அப்பா இரட்டைக்கொள் கையல்லவா கடைப்பிடிக்கிராரு! பெண்ணுக்கு வரதட்சணை அதிகம் கொடுக்கமாட்டேன். பையனுக்கு வரதட்சணை கேட்கிறது கொடுத்தாதான் உங்க பெண்ணை அவனுக்குக் கட்டு வேன்!' இந்தக் கொள்கை எப்ப நிறைவேறப் போவுதோ! நம்ப வீட்டிலே மங்கல வாத்தியம் எப்ப முழங்கப் போவுதோ?" என்று 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/34&oldid=1702195" இலிருந்து மீள்விக்கப்பட்டது