பக்கம்:ஒரே இரத்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகேஸ்வரன் கூறிக்கொண்டே அப்பாவின் முகத்தில் என்ன பிரதி பலிப்பு காணப்படுகிறது என்பதை ஆவலுடன் நோக்கினான். பண்ணையார் ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டார். "பகவான், காமாட்சிக்கு யார் மாப்பிள்ளை, பார்வதிக்கு யார் மருமகள்ன்னு தலையிலே எழுதித்தான் அனுப்பிச்சிருப்பார்! அது அது நடக்க வேண்டிய காலத்திலேதான் நடக்கும். அதுக்குப் பேர்தான் விதி. இத பார்! இந்த தெய்வீகக்குழந்தை - இதை யார் கண்ணிலும் காட்டாமல் ஆண்டவன் நம்ப கண்ணிலே காட்டி யிருக்காரே, ஏன்? இதுதான் தேவனின் திருவிளையாடல்'- பரமேஸ்வரீன் ஆழ்ந்த பக்தியுடன் இந்த வாசகத்தைத் தன் மகனுக்கு விடையாக வழங்கிவிட்டுக் காமாட்சியின் கையிலிருந்த குழந்தையை மிகப் பிரியமுடன் தன் கையில் வாங்கினார். 66 டே! டே ! டே! பன்னீர் தெளிச்சுட்டான்; பன்னீர்!” என்று முகத்தில், அசடும் ஆனந்தமும் சேர்ந்து வழியத் திண் டாடித் திணறினார். சரி! கொஞ்சம் வேலையிருக்கு; வெளியில போய்ட்டு வர் ரேன்’ என்று கிளம்பினான் மகேஸ்வரன். › 5 "வந்ததும் வராததுமா சாப்பிடாமகூடப் போறியே!’» பார்வதியம்மாளின் தாயுள்ளம் குழைந்தது. இல்லேம்மா! சாப்பிட வந்துடுவேன். திருவாரூர் வரை யிலே போயிட்டு ஒரு மணி நேரத்திலே திரும்பிடுவேன்” தாய்க்குச் சமாதானம் கூறிவிட்டு மகேஸ்வரன், வாசலில் நிறுத்தப்பட் டிருந்த காரை ஓட்டிக்கொண்டு புறப்பட்டான். கார், மீண்டும் மாரி வசிக்கின்ற தெருவின் முனையில் போய் நின்றது. மகேஸ்வரன், காருக்குள்ளிருந்து ஒரு பெட்டியையும், கூடையையும் எடுத்துக்கொண்டு மாரி வீட்டை நோக்கி வந்தான். தெருவில் யாரும் இல்லை. ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டும் மண் ணில் புரண்டு விளையாடிக்கொண்டிருந்தன. மற்றவர்கள் வயல் வெளிகளுக்குச் சென்றுவிட்டனர் போலும்! மாரியின் வீட்டுக் மகேஸ்வரன் எந்தத் தயக்கமுமின்றி குள்ளே நுழைந்தான். திண்ணை வாசற்படிக்குள்ளே வந்ததுமே உள்ளே நந்தகுமார், கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தது தெரிந் தது. “நந்தகுமார்! அவசரத்திலே உன் பெட்டியையும் கூடையை யும் காரிலிருந்து எடுத்துக் கொடுக்க மறந்துட்டேன். அதுக்குத் தான் இப்ப வந்தேன். வீட்டிலே யாருமில்லியா?” என்று கேட் டுக்கொண்டே உள்ளே நுழைந்த மகேசின் முன் நெற்றியில் மாரி வீட்டுத் தாழ்ந்த நிலை வாசல்படியின் முகப்பு ‘படார்’ என்று தாக்கியது. “அப்பாடா என்று நெற்றியைப் பிடித்துக் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/35&oldid=1702196" இலிருந்து மீள்விக்கப்பட்டது