பக்கம்:ஒரே இரத்தம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டே நந்தகுமாரின் கட்டிலின் ஓரமாக மகேஸ்வரன் உட் கார்ந்துவிட்டான்.. ‘‘என்னங்க! அடி பலமா பட்டுவிட்டதுங்களா?" திடுக்கிட்ட வாறு நந்தகுமார் எழுந்து உட்கார்ந்து மகேசின் தலையைத் தேய்த்து விட்டான். ஒரு சிறு நெல்லிக்காய் அளவு மகேசின் முன் நெற்றி யில் புடைப்பு ஏற்பட்டு ரத்தம் கட்டிக்கொண்டது. "அக்கா! அக்கா!” நந்தகுமார் அழைத்தான் செங்கம லத்தை! அவள் எங்கும் போய்விடவில்லை. அவள் அடுப்பில் கருவாடு சுட்டுக்கொண்டிருந்தாள். நந்தகுமார் அழைப்பதற்கு முன்பே அவள் அடுப்பங்கரை சாக்குப் படுதாவுக்கருகே வந்து நின்று மகேஸ்வரன் இடித்துக்கொண்டதை எண்ணித் துடித்துக்கொண்டு தானிருந்தாள். தம்பி கூப்பிட்டதும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செங்கமலம்; சாக்குப் படுதாவை விலக்கியவாறு என்ன தம்பீ! என்றாள். மகேசின் விழிகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளா யின. செங்கமலத்தின் விழியம்புகளோடு அவை மோதின! “சீக்கிரம் கொஞ்சம் மஞ்சளை அறைச்சு கொதிக்க வையக்கா! நம்ப வீட்டு வாசற்படி இவர் தலையிலே நல்லா மோதிட்டு!” இது கேட்டு மகேஸ்வரன் சிரித்துக்கொண்டான். 'இல்லை நந்தகுமார்! உங்க வீட்டு வாசற்படி என்னை மோத வில்லை. நான்தான் அதிலே போயி மோதிக்கிட்டேன். « “ஏங்க! எங்க அண்ணனையோ அப்பாவையோ வரச் சொல்லி, அவுங்ககிட்ட பெட்டியையும், கூடையையும் கொடுத் தனுப்பக்கூடாதா? நீங்களே ஏன் தூக்கிட்டு வரணும்! நந்த குமார், மிகுந்த வேதனையுடனும் மரியாதையுடனும் கேட்டான். « « 'திருவாரூருக்குப் போகவேண்டிய வேலை இருந்தது. அப் படியே வழியிலே கொடுத்துட்டுப் போய்டுவோமேன்னு நினைச் சேன். இருவரும் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள் மஞ்சள் பத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிறு கிண்ணத்துடன் செங்கமலம் எதிர்வந்து நின்றாள். கறுப்பிலே ஒரு அழகு என்பார்களே; அந்த அழகு முழுமை குலையாமல் எதிரே வந்து நிற்பதாகத்தான் மகேஸ்வரனுக்குத் தோன்றியது. நெளிநெளியான கூந்தல். காதுகளைத் தொட முய லும் சேல்கெண்டைகளையொத்த கண்கள்.பகட்டோ பளபளப்போ இல்லாத ஜாக்கெட்தான் போட்டிருந்தாள் என்றாலும் 'பிரமிட்' கோபுரங்களின் வடிவு காட்டும் அந்தக் கவர்ச்சியை மகேஸ்வரன் இதுவரையில் சிலைகளிலோ, ஓவியங்களிலோ கூடக் கண்டதில்லை! 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/36&oldid=1702197" இலிருந்து மீள்விக்கப்பட்டது