பக்கம்:ஒரே இரத்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் தகப்பனும் அண்ணனும் வேலை பார்க்கும் பண்ணை யின் சின்ன எஜமான் முன் நிற்கிறோம் என்ற அச்சம்! தங்குதடை யின்றி உள்ளத்தில் தோன்றிவிட்ட ஏதோ ஒரு உணர்வினால் ஏற் பட்ட நாணம்! செங்கமலம் நின்றுகொண்டேயிருந்தாள். மகேஸ் வரன் எங்கேயோ பறந்துகொண்டேயிருந்தான். . உள்ளத்தோடு கடுகளவுகூடக் கள்ளங்கபடமற்ற நந்த குமார் அக்காளிடம் சொன்னான். “ஆறிடப் போகுதக்கா! மஞ்சப் பத்து சூடாப் போட்டாத்தான் அந்த ரத்தக் கட்டு கரையும்! உம்! அவர் நெத்தியிலே போட்டுடு!” மீட்டிவிட்ட வீணைத் தந்திகள்போல் நரம்புகள் அதிர்ந்திட, செங்கமலம்; கிண்ணத்துடன் மகேஸ்வரனின் அருகே சென்றாள். ‘“வேண்டாம்! வேண்டாம்! நானே போட்டுக்கிறேன்’” என்று மகேஸ்வரன் சொன்னபோது அவன் நாக்கு உலர்ந்து போய் வார்த்தைகள் தடுமாறின. செங்கமலம், "உங்களால தொடமுடியாது! கொதிக்கும்’ என்று பேச்சை முடிக்காமலே அவளே மஞ்சளை எடுத்து நெற்றி யில் போட்டாள். கொதித்தது மஞ்சள் என்றாலும், அவனுக்குக் குளுகுளு' என்றிருந்தது. அவள் விரல்களும் நர்த்தனமாடின. அவன் நெஞ் சிலும் அலைகள் மோதின. விளைவு, மஞ்சள் பத்து வீக்கத்தில் மட்டுமன்றி அவன் முகமனைத்திலும் கோடுகளாக விழுந்தது. தலையில் கட்டுடனும் உடலில் வலியுடனும் கயிற்றுக் கட்டி லில் படுத்திருந்த நந்தகுமார், அக்காள் செங்கமலத்தைக் கடிந்து கொண்டான். துகூடவா ஒழுங்காப் ஒழுங்காப் போடத் தெரியாது! அரிக்கஞ்சட்டியிலே கொஞ்சம் தண்ணியாவது கொடு! அவர் முகத் தைக் கழுவிக்கட்டும். - செங்கமலம், பயமும், பணிவும், நெளிவும், குழைவும் கலந்திட அசைந்தோடி வந்து சட்டியில் தண்ணீரையும் வைத்து, கீறல் விழுந்திருந்த ஒரு சட்டம் போட்ட கண்ணாடியையும் எடுத்துவந்து மகேஸ்வரனிடம் கொடுத்தாள். மகேஸ்வரன், தன் முகத்தை அந்த உடைந்த கண்ணாடியில் பார்த்துச் சிரித்துக்கொண்டான். வீக்கத்தைத் தவிர மற்ற இடங் களில் பட்டிருந்த மஞ்சளையெல்லாம் கழுவிக்கொண்டு, தன் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டான். ‘'சரி! நந்தகுமார் - நேரமாகிறது. நான் வர்ரேன். நீ ரெண்டு மூணு நாளைக்கு நல்லா ஓய்வெடுத்துக்க! மறுபடியும் ஒரு தடவை டாக்டருகிட்ட காட்டி தலையில உள்ள கட்டைப் பிரிக்கணும். அதுக்கு நானே வந்து அழைச்சுகிட்டுப் போறேன்.” மகேஸ்வரன் எழுந்துவிட்டான். நந்தகுமார், சரிங்க! ரொம்ப நன்றிங்க!” என்றான். 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/37&oldid=1702198" இலிருந்து மீள்விக்கப்பட்டது