பக்கம்:ஒரே இரத்தம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் திரண்டு வந்திருக் கிறார்கள் என்பதும் மகேஸ்வரனுக்கு விரைவில் விளங்கிவிட்டன. மகேஸ்வரன் காரை நிறுத்தி இறங்கினான். இரு சாராரும் மோதிக்கொள்ளும் இடத்தை நோக்கி ஓடினான். 'நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று கத்தினான். பயனில்லை. கலவரம் கடுமை யாயிற்று. மகேஸ்வரன் மனஉறுதி குலையவில்லை. திடீரென இரு சாராருக்கும் இடையில் போய் நின்றுகொண்டு கைகளை உயரத் தூக்கியவாறு உரத்த குரலில் அழுத்தம் திருத்தமாக அறிவித் தான். “முதலில் என்னை அடித்துக் கொன்றுவிட்டு பிறகு இரு சாராரும் அடித்துக் கொள்ளுங்கள்!” உயர்ந்த கம்புகள் தாழ்ந்தன! ஓங்கிய அரிவாள்கள் தரையில் வீழ்ந்தன! ஒரே அமைதி! 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/40&oldid=1702202" இலிருந்து மீள்விக்கப்பட்டது