பக்கம்:ஒரே இரத்தம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 த ன்னுடைய உருக்கமான வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு இரு சாராரும், தாங்கள் ஏந்தியிருந்த வன்முறைக் கருவிகளைக் கீழே போட்டுவிட்டு அசைவற்று நின்றதைக் கண்ட மகேஸ்வரன் கண்களில் நீர் துளிர்க்க உதடுகளில் புன்னகை மின்னிட னன் தோளில் ஒரு கையைப் போட்டுக்கொண்டு, இன்னொரு கையை எதிர் வரிசைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த கொத்துமீசைக்கார வாலிபனின் தோளில் போட்டுக்கொண் டான். பொன் தன் “உன் பெயர் என்னப்பா? என்று மகேஸ்வரன் கேட்ப தற்குள் “நாகேந்திரன்” என்ற பதிலைச் சொல்லிவிட்டு தோள் மீதிருந்த மகேசின் கையை மெதுவாகத் தள்ளிவிட்டுச் சிறிது அகன்று நின்றான். "ஒருபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள்! மறுபுறம் பிற்படுத்தப் பட்ட மக்கள்! உங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டும் வெட்டிக் கொண்டும் நீங்கள் பிறந்த இந்த மண்ணில் ரத்தத்தைத் தெளிக் கிறீர்களே; அதனால் பகையென்னும் பயிர்தான் விளையுமே தவிர- வேறென்ன நற்பயனைக் காணப் போகிறீர்கள்? இதோ நான், உங்களைவிட உயர்ந்த ஜாதிக்காரன்! ஒரு காலத்தில் உங்களை இப் படிப் பிரித்து வைப்பதில் சுவை கண்ட பெரிய ஜாதிக்கார வீட்டுப் பிள்ளை! மிகச் சிறுபான்மையோராகிய எங்களால் மிகப் பெரும் பான்மையான உங்களை எப்படிப் பிரித்து வைக்க முடிந்தது? உங்களுக்கு வீரம் உண்டு! வல்லமை உண்டு! அறிவு உண்டு! ஆற் றல் உண்டு! எதற்கும் அஞ்சாத துணிவு மிக்கவர்கள்தான் நீங்கள் ! - இதோ இந்தப் பக்கம் நிற்கிற தாழ்த்தப்பட்ட சகோதரர் களானாலும் - அதோ அந்தப் பக்கம் நிற்கிற பிற்படுத்தப்பட்ட சகோதரர்களானாலும் எங்களைவிட எதிலும் எதிலும் குறைந்தவர்கள் அல்ல! உண்மையாகச் சொன்னால் எங்களைவிட உயர்ந்தவர்களே தான் நீங்கள் எல்லாம்! ஆனாலும் ஒற்றுமை என்ற ஒரு குணம் இல்லாத காரணத்தால் உங்களை ஒருவரையொருவர் மோத விட்டுக்கொண்டே எங்களைப் போன்ற பெரிய ஜாதிக்காரர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/41&oldid=1702203" இலிருந்து மீள்விக்கப்பட்டது