பக்கம்:ஒரே இரத்தம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் “இந்தப் பொன்னனின் தம்பி நந்தகுமார், படித்துக் கொண்டிருக்கிறான். ஊருக்கு வந்து தாய் தகப்பனாரைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று புறப்பட்டிருக்கிறான். ரயிலடி யிலிருந்து ஒரு வண்டி பேசிக்கொண்டு கிளம்பியிருக்கிறான். வழி யில் இந்த ஊரை வண்டி கடக்கும்போது, நந்தகுமார் மாரியின் மகன் என்பது வண்டிக்காரப் பெரியவருக்குத் தெரிந்திருக்கிறது! அந்தப் பெரியவர் யார்? அவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்தான்! இருந்தாலும் அவருக்கு ஆத்திரம் பீறிட் டுக் கிளம்பியிருக்கிறது! .. ‘அது அவர் குற்றமல்ல! நூற்றாண்டுக் காலமாக ஊறிப் போயிருக்கிற ஜாதி உணர்ச்சி! அந்த உணர்ச்சி வெறியாக மாறி யது! வண்டியைக் கவிழ்த்தது! நந்தகுமாரின் மண்டையைப் பிளந்தது! அந்த நேரம் நான் காரில் வந்திராவிட்டால் நந்த குமார், பிணமாகக் கூட ஆகியிருக்கக்கூடும். செய்தி பரவிற்று! அம்பல் காலனி மக்கள் ஆயுதபாணிகளாகப் புறப்பட்டனர். வீரவாடிப் பகுதியைச் சேர்ந்தவர்களும் எதிர்த்துத் தாக்கினர். கலவரம் மூண்டது. இந்நேரம் நான் வராமல் போலீசார் இங்கு வந்திருந்தால் உங்கள் இரு சாராரையும் கைது செய்து லாரிகளில் ஏற்றிக்கொண்டு போயிருப்பார்கள்! 'தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பகை உணர்ச்சி தேவைதானா? கல்வியென்னும் பலகணி திறக்கப்பட்டு, அறிவு மணம் பரவிடாத இந்தக் கிராமப்புறங்களில் மட்டுமல்ல; நவீன விஞ்ஞானக் கல்வி முறைகளும் நாகரீகமும் நடைபழகு கின்ற நகர்ப்புறங்களிலே கூட இத்தகைய சாதிக் கலவரங்களைத் தவிர்க்க முடியவில்லை. அறிவு ஒளியை ஏற்றி வைக்கின்ற கல்லூரி களில் மாணவர்களுக்கிடையேகூட சாதிக் கலவரங்கள் தலை விரித்தாடுகிற அலங்கோலத்தை இன்னமும் காண முடிகிறது. அந்தக் கலவரங்களில் ஈடுபட்டு இரத்தம் சிந்துவோர் யார்? நாட்டில் ஜாதிகளைப் பிரித்து வைத்து தங்கள் வாழ்வை வளப் படுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிற உயர்ஜாதிக் காரர்களா? - - யார் “இல்லை! இல்லவே இல்லை! யார் தாழ்த்தப்பட்டுக் கிடக் கிறார்களோ யார் ஒதுக்கப்பட்டு உழல்கிறார்களோ பிற்படுத்தப்பட்டுப் பள்ளத்தில் உருண்டு வீழ்ந்திருக்கிறார்களோ- அவர்கள்தான் ஒருவருக்கொருவர் ஆயுதம் தாங்கிக் கலவரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாலு வேங்கைகள் சேர்ந்து நாற் பதாயிரம் மான்கள் கொண்ட கூட்டத்தை ஒற்றுமையில்லாக் கூட்டமாக ஆக்கிவிட்டன. இப்போது மான்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. வேங்கைகள் வேடிக்கை பார்க்கின்றன. மானும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடித்தன என்று அந்தக் காலத்தில் ஆட்சிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டினை எழுதிக்காட்டு வார்கள்! இப்போது மானும் புலியும் கூட வேண்டாம்; மானும் மானுமாவது ஒரே துறையில் தண்ணீர் குடிக்க வேண்டாமா?" 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/42&oldid=1702204" இலிருந்து மீள்விக்கப்பட்டது