பக்கம்:ஒரே இரத்தம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகேஸ்வரனின் உணர்ச்சி மிக்க உரை கேட்டு அந்தக் கலகக் கூட்டம் மெய்மறந்து நின்றது. நாகேந்திரன் மட்டும் தனது கொத்து மீசையைத் தடவிக் கொண்டு மகேஸ்வரனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் கேட்டான். “நீங்க சொல்றதெல்லாம் கேக்கிறதுக்கு இனிப்பதாதான் இருக்கு! ஆனா இது ஏட்டுச் சக்கரையா இருந்து பிரயோஜன மில்லியே!’ தனது கருத்துக்கள், நாகேந்திரனின் இதயத்தைத் தொட் டிருக்கின்றன என்ற மகிழ்ச்சியோடு மகேஸ்வரன், நெருங்கி முதுகில் தட்டிக்கொடுத்தான். அவனை “ஏட்டுச் சர்க்கரையாக இருக்கக்கூடாது! நாட்டு நடப் பாக அமைய வேண்டும்! அதற்குத்தான் நான் பாடுபட்டு வரு கிறேன். என்னை, அந்தக் கொள்கைக்காகவே ஒப்படைத்துவிட்டு வாழ்ந்து வருகிறேன். என்னைப் போல ஒவ்வொருவரும் தங்களைத் திருத்திக்கொண்டு சாதிபேதப் பூசல்களற்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த உழைப்பார்களேயானால் இந்த நாடு வகுப்புக் கலவரங் களுக்கு அப்பாற்பட்ட அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பது என் திடமான நம்பிக்கை!” நாகேந்திரன் விடவில்லை. தொடுத்தான். வினாக்கணைகளைத் தொடர்ந்து 'உங்களைப் போல உயர் ஜாதிக்கார வாலிபர்கள் பல பேர் ஊருக்கு உபதேசம் பண்ணிட்டுப் போற கதை எனக்கும் தெரியும். நீங்க உண்மையிலேயே ஜாதி பேதங்களை ஒழிக்கணும்னு நினைச்சா; ஹரிஜன வீட்டிலே ஒரு பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கத் தயாரா?’ மகேஸ்வரன் திடுக்கிடவில்லை. இந்தக் கேள்வி அவனைத் கலகலவென்று சிரித்துக்கொண் திகைக்க வைத்துவிடவுமில்லை. டான். « "நல்ல வேளை! இன்னும் எனக்குத் திருமணமாகவில்லை! நாகேந்திரா! மிகவும் நன்றி! உன் யோசனைப்படியே முயற்சி மேற்கொள்கிறேன். திருமணம் செய்துகொண்டால் ஹரிஜன வீட்டுப் பெண்! இல்லையேல் எனக்குத் திருமணமே கிடையாது சாகிற வரையில்!” 'இப்படிச் சொல்லித் தப்பிக்க முடியாது. உங்க உள்ளத் திலே ஜாதி உணர்ச்சி இல்லேன்னா, எப்படியாவது ஒரு ஹரிஜனப் பெண்ணைக் கல்யாணம் கட்டியே ஆகணும்! அதுக்கு ஒத்துக்காம நான் சாகிற வரையிலும் திருமணம் பண்ணிக்கமாட்டேன்னா என்ன அர்த்தம்? வாழ்க்கை பூரா பிரம்மச்சாரின்னா ரொம்ப நல்லதாப் போச்சு! கட்டினவனுக்கு ஒண்ணு! கட்டாதவனுக்குக் கணக்கு வழக்கேயில்லை!' க 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/43&oldid=1702205" இலிருந்து மீள்விக்கப்பட்டது