பக்கம்:ஒரே இரத்தம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“நாகேந்திரா! என்னை நீ நம்பலாம். எனக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கப் போகிறவள் ஒரு ஹரிஜன மங்கைதான்! திருமண அழைப்பு அனுப்புகிறேன். முன்னதாகவே வந்திருந்து தம்பதிகளை வாழ்த்திவிட்டுப் போ!" மகேஸ்வரனின் பேச்சு, எல்லோருடைய நெஞ்சிலும் பெரும் வியப்பை உருவாக்கி விட்டது. அந்தச் சமயத்தில் வண்டிக்காரப் பெரியவர் குறுக்கிட்டார். அவர்தான் நந்தகுமாரைத் தாக்கியவர். அவர் மகேஸ்வர னைப் பார்த்து; - 'தம்பீ! தாராளமா வாக்குறுதி கொடுத்துட்டீங்க! ஆனா உங்கப்பா இருக்காரே; அவரு மாதிரி ஒரு பக்திமான் அந்தக் காலத்து ஐதீகங்களை அப்படியே கடைப்பிடிக்கிறவரு இந்த உல கத்திலேயே ஒருத்தரு கிடையாது! அவரு சம்மதிப்பாரா?” என்று கேட்டார். “திருமணம் - என் வாழ்வுப் பிரச்சினை! என் சொந்த விஷ யம்! அதிலும் ஒரு கொள்கைக்காக நான் எடுக்கும் முடிவை, யாரும் குறுக்கிட்டுத் தடுக்க முடியாது! என்று உறுதியாக மகேஸ்வரன் கூறியபொழுது, சற்று நேரத்திற்கு முன்பு மாரி வீட்டில் தன் நெற்றிக்கு மஞ்சள் பத்துப் போட்ட செங்கமலம் அவன் அகக்கண்ணின் முன்னே நின்று நாணிக்கோணி நெளிந்து கொண்டிருந்தாள். ஒரு வழியாக அம்பல் காலனிக்காரர்களை சொல்லிவிட்டு வீரவாடிப் பகுதியினரிடமும் கொண்டு காரில் ஏறிக் கிளம்பினான். ஊர் திரும்பச் விடைபெற்றுக் பேசிக் ஒரு பெருங்கலவரத்தை மிகத் திறமையாக அமைதிப்படுத் திய பகேஸ்வரனின் அறிவாற்றலை அனைவரும் புகழ்ந்து கொண்டே கலைந்தனர். முரட்டு மீசை முனியாண்டி மட்டும், தன் திருக்கைவாலைச் சுழற்றிக்கொண்டு பொன்னனிடம் கடிந்து கொண்டான். இந்நேரம் இந்த ஊரையே அதம் பண்ணியிருக்கலாம்ப்பா! இந்த ஆள் வந்து கெடுத்தான்.' முனியாண்டிக்குப் பொன்னன் சமாதானம் சொன்னான். "அவர் சொல்றதும் சரிதானே முனியாண்டி! கலகம் நடக் கும்போது அவர் வராமல் போலீஸ் வந்திருந்தா, நம்ம நம்ம எல் லோரும் கம்பி எண்ண வேண்டியிருக்குமா; இல்லியா? அட போப்பா! தலைக்கு மேல போயாச்சு! இனிமே சாண் போனா என்ன, முழம் போனா என்ன? நம்ப நம்ப அம்பல் காலனியிலே உள்ள ஒரு பிள்ளையை இவனுங்க அடிக்கிறது; அதை நம்ப வேடிக்கை பாத்துகிட்டு கிடக்கிறதா?” 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/44&oldid=1702206" இலிருந்து மீள்விக்கப்பட்டது