பக்கம்:ஒரே இரத்தம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" விட் ‘முனியாண்டி! இத்தனை நாழி மகேஸ்வரன் சொன்னாரே அதெல்லாம் இந்தக் காதால வாங்கி, அந்தக் காதால டுட்டியா? அவுங்க பிற்பட்டவுங்க! நம்ப தாழ்த்தப்பட்டவுங்க! இரண்டு பேரும் அடிச்சுகிட்டா யாருக்கு லாபம்?” சரி! சரி! இன்னைக்கு நம்ப திருக்கை வாலுக்கு வேலை யில்லாமப் போச்சு!’ முனியாண்டி சலிப்புடன் முணுமுணுத் துக்கொண்டான். அம்பல் பட்டாளம் ஊருக்குள் திரும்ப நுழைந்தது. விளக்கமாகச் பொன்னன், தங்கள் படை போய் வந்த கதையைத் தாய் தந்தையிடமும் தம்பி நந்தகுமாரிடமும் சொன்னான்'. செங்கலமும் அடுக்களையில் வேலை பார்த்தவாறே பொன்னன் விவரித்த நிகழ்ச்சிகளுக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணன் செய்தது சரியென்று நந்தகுமார் ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும் மகேஸ்வரன் கலகத்தை அடக்கு வதற்கு எடுத்துச் சொன்ன கருத்துக்களை நந்தகுமார் மிகவும் ரசித்தான். மகேஸ்வரன் ஒரு ஹரிஜனப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வாராம் என்று பொன்னன் கூறிய விஷயம் மாரிக்கும் அஞ்சலைக்கும் அஞ்சலைக்கும் அதிர்ச்சியைத் தந்தது! நந்தகுமா ருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது! செங்கமலத்திற்கோ எத்தனையோ கனவுகள்! கன்னங்கள் அந்தக் கறுப்பு நிறத்தையும் மீறிச் சிவந்தன! "என்னா மச்சான்! போன காரியம் என்னா ஆச்சு? அடிச்சு நொறுக்குனியா?" என்று வீராயி, முனியாண்டியை ஆவலு டன் கேட்டாள். கடையிலிருந்த முறுக்கு ஒன்றை நொறுக்கி வாயில் போட் டுக்கொண்டே முனியாண்டி; கலகம் இடையிலேயே முடிந்து கதையை வீராயியிடம் சொன்னான். விட்ட ‘“மச்சான்! நீ வருவேன்னு ஒரு முக்கியமான முந்தானையிலே முடிஞ்சு வச்சிருக்கேன்.' சேதியை வீராயி, இளித்துக்கொண்டே அந்தச் செய்தியின் சுவையை வெளிப்படுத்தினாள். 6 “என்னா சேதி! முழுவாம கொள்ளாம இருக்கியா?” “ஆமாம் போ! அது வேற கேக்குது நீ சம்பாதிக்கிற லட் சணத்துக்கு! ‘அப்புறம் என்னா? சொல்லேன் என்னா சேதின்னு!” 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/45&oldid=1702207" இலிருந்து மீள்விக்கப்பட்டது