பக்கம்:ஒரே இரத்தம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு " 6 'நம்ப சேதி! அஞ்சலை மகள் செங்கமலத்தைப் பத்திதான் அது தங்கமான பொண்ணாச்சே!” 'ஆமாம், தங்கம்! பூமியில வெட்டி எடுத்துச்சு! சரி! நீட்டி முழக்காதே! விஷயத்தைச் சொல்லு!” சொல்லத்தான் போறேன். சொல்லாமலா இருக்கப் போறேன்!' "சொல்லு வீராயி சொல்லு!” அந்த “பண்ணைக்காரு மகன் மகேசு இருக்குதே - அது மறு படியும் ஒரு வாட்டி அஞ்சலை வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போச்சு. கையில ஒரு கூடை! ஒரு பெட்டி! இதெல் லாம் வேற கொண்டாந்து கொடுத்துட்டுப் போச்சு! நேரத்திலே அஞ்சலையும் இல்லை. மாரி அண்ணனும் இல்லை. அவன் பொன்னன் தான் உன்னோட வந்துட்டான். அந்தச் சின்னப்பய நந்தகுமார், செங்கமலம் ரெண்டு பேருந்தான் இருந்தாங்க!” 6 'ஓகோகோ! அப்படியா சங்கதி! சரி சரி வீராயி - இதை ஊர்பூரா சொல்லிகிட்டு கிடக்காதே! போகப்போக என்னா நடக்குதுன்னு கவனிப்போம்!” ‘‘என் கண்ணுக்குத் தப்பி என்னா நடந்துடும். இனிமே பார்வையை அந்தப் பக்கம்தானே வச்சிருப்பேன். நான் 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/46&oldid=1702434" இலிருந்து மீள்விக்கப்பட்டது