பக்கம்:ஒரே இரத்தம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பண்ணையார் பரமேஸ்வரன் சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபடி, அவரது வீட்டு முகப்பின் கீழே கைகட்டித் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு மரியாதையுடன் நின்று கொண்டிருந்த மாரியின் மீது ஆத்திரத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தார். "என் மகனுக்குத்தான் அறிவு இல்லேன்னா உனக்கு எங்க போச்சு புத்தி? நீயல்லவா அவனை உன் வீட்டுக்கு வராமல் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்? அந்தக் காலத்துப் பெரிய வுங்க அவுங்களுக்குத் தெரியாமலா சாஸ்திரங்களையும் சம்பிர தாயங்களையும் எத்தனையோ வருஷ காலமா வாழையடி வாழை யாகக் கடைப்பிடிச்சு வர்ராங்க? சொல்றேன்னு வருத்தப் படாதே மாரி! நான் ஒரு வைதீகன்! சனாதனி! என்னதான் காலம் இப்போ கெட்டுப் போனாலும் - எந்தக் காரியம் தலை கீழா மாறினாலும் – என்னை யாரும் மாத்த முடியாது! பையன் மகேசு என்னமோ பெரிய சீர்திருத்தமெல்லாம் பேசு ரான் - அவனைப் பார்த்து உங்க ஜாதியிலே ஒரு பெண்ணைக் கட்டிக்கடான்னா கட்டிக்குவானா?" - - என் அப்படி உடனே மாரி இடைமறித்தார். "GTLDIT GOT! யெல்லாம் சின்ன எஜமானைப் பாத்துக் கேட்டுடாதிங்க! அவரு; சரின்னு சொன்னாலும் சொல்லிடுவாரு! அந்த அளவுக்கு அவர் பேசுற பேச்சு இருக்கு. இல்லேன்னா அவரு, எங்க வீட்டுக்கு நந்தகுமாரைக் காரிலே அழைச்சிகிட்டு வந்தப்போ நான் எவ்வளவோ மன்றாடிக் கெஞ்சிப் பாத்தேன். இதெல் லாம் கூடாதுங்க சின்ன எஜமான்னு அவரு கால்ல கூட விழுந் தேன். அவரு கேட்க மாட்டேன்னுட்டாரு! அப்படிப்பட்ட பிடிவாதக்காரரைப் பார்த்து நீங்க தவறிப்போயி நீ ஒரு ஹரிஜனப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குவியான்னு கேட்டா; சரின்னுதான் சொல்வாரே தவிர மாட்டேன்னு தட்டிக்கழிக்கவே மாட்டாரு எஜமான்!” மகேஸ்வரனின் உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது மாரியின் பதில்! 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/47&oldid=1702435" இலிருந்து மீள்விக்கப்பட்டது