பக்கம்:ஒரே இரத்தம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - மக 'மாரி! நீ ஒரு பைத்தியக்காரன்! ஊருக்கு உபதேசம் உதட்டளவிலே பண்ணுவானுங்க! எல்லாரும் ஓர் குலம் எல்லா இரத்தமும் ஒரே இரத்தம்னு பிறர் மெச்ச நடிப்பானுங்க! ஆனா அவனவனும் சொந்தச் சமாச்சாரத்திலே வர்ரப்ப சொன் னதையெல்லாம் மறந்துடுவானுங்க! அவனுங்க மறக்கிறது மாத் திரமில்லை; ஜனங்களும் மறந்துடுவாங்கன்னு அவனுங்களுக்குத் தெரியும்! ஜனங்களும் பாவம்; அப்படித்தான் இருக்காங்க! ஜாதி வித்தியாசம் ஒழியணும்னு மேடையிலே நின்னு கர்ஜனை பண்ற எத்தனை பேருங்க அவுங்க மகனுக்கோ அல்லது ளுக்கோ அரிஜனங்கள் குடும்பத்திலேயிருந்து பெண்ணையோ அல்லது பிள்ளையையோ எடுத்திருக்கானுங்க? எங்கே விரல் விடு பாக்கலாம்! ஏதோ ஒரு விரல் ரெண்டு விரல் விடலூம். அவ் வளவுதான். என்னைப் பொறுத்தவரையிலே மனசில இருக்கிறதை ஒளிவு மறைவு இல்லாம பேசக்கூடியவன். நான் ஆச்சார அனுஷ் டானங்களிலே எள் முனையளவும் தவறாதவன். நானும் சரி; குடும்பத்திலே இருக்கிறவங்களும் சரி; அப்படி எனக்கு விரோ தமா நடக்கிறதுன்னு ஆரம்பிச்சா; ஒண்ணு அவுங்களை வீட்டை விட்டு விரட்டுவேன் இல்லே நான் வீடுவாசலைத் துறந்து காசி - ராமேஸ்வரம்னு சாமியாராப் போய்டுவேன்.” - - என் தன்னுடைய வைராக்கிய நெஞ்சத்தைப் பற்றியும் வைதீ கத்தின் மீதுள்ள பிடிப்பு பற்றியும் மகேஸ்வரனுக்கு மாரி அவ்வ ளவு இடம் கொடுத்தது தப்பு என்பது பற்றியும் பண்ணையார் வியாக்யானம் செய்துகொண்டிருந்தபோது, அழுகிற குழந்தை யைத் தோளில் போட்டுத் தன் பூப்போன்ற கரத்தால் கொடுத்தவாறே திண்ணைப் பக்கம் வந்தாள் காமாட்சி! பண்ணை யாரின் கவனம் குழந்தையின் பக்கம் சென்றது. தட்டிக் ‘“என்னம்மா! பையன் அழுவுறானா?... இங்க கொண்டா அவனை! என ஆசையுடன் சென்று காமாட்சியிடமிருந்து குழந் தையை அவர் வாங்கிக் கொண்டார். குழந்தையின் கன்னத்தைத் தன் கன்னத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அந்தத் தெய்வீகக் குழந்தைக்குத் தீட்டுக் கழித்து வீட்டில் சேர்த்துக் கொண்டபோது அந்தச் சின்னப் பயல் அவர் உடம்பில் பன்னீர் தெளித்தான் அல்லவா? இப்போது சந்தனமே பூசிவிட்டான். பண்ணையார் முகத்தில் பரவசம்தான் ஏற்பட்டதே தவிர அசிங்கப் படும் உணர்வு மின்னிடக்கூட இல்லை. அவ்வளவு பற்றும் பாச மும் அந்தத் தெய்வீகக் குழந்தையின் மீது அவருக்கு ஏற்பட் டிருந்தது! மாரியிடம் அவர் காட்டிய கோபமெல்லாம் மறைந் தது. “பாத்தியா மாரி! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்! இது; தெய்வமே குழந்தையா குழந்தையா வந்து இந்த வீட்டிலே குதிச்சிருக்கு!' என்றார் குதூகலத்துடன்! “சின்னம்மாவுக்குக் காலா காலத்தில கல்யாணத்தைப் பண்ணியிருந்தா இந்நேரம் சொந்தப் பேரனையோ பேத்தி யையோ தூக்கி எஜமான் கொஞ்சிக்கிட்டிருக்கலாங்களே!” 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/48&oldid=1702436" இலிருந்து மீள்விக்கப்பட்டது