பக்கம்:ஒரே இரத்தம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே இரத்தம் 1 சென்னையிலிருந்து இரவு ஒன்பதரை மணிக்குப் புறப் பட்ட புகைவண்டி மறுநாள் காலை ஆறு மணி அளவில் மாயூரம் நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து அதே வண்டியில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கி சூடாகத் தேநீர் அல்லது காப்பியை வாங்கி அவசர அவசரமாகக் குடித்துவிட்டு, வண்டிப் பெட்டிகளில் இருந்த தங்கள் வீட்டாருக்கும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். மாயூரத்திலேயே இறங்கவேண்டியவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் உதவியோடு தங்கள் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு உயரமான மரப்பாலத்தில் ஏறிக் கடந்து மாட்டு வண்டிகளையோ குதிரை வண்டிகளையோ தேடுகிற முயற்சியில் ஈடுபட்டனர். பொடியைத் தூவினாற்போலத் தலையிலும் உடையிலும் ஒட்டிக்கொண்டிருந்த ரயில் கரியினால். அழுக்கேறி விளங்கிய அவர்கள், வீட்டுக்குப் போய்த்தான் புது மனிதர்களாக ஆக வேண்டும். புகைவண்டி நின்றுகொண்டிருந்த இடத்தில் பத்திரிகை விற்கும் இளைஞர்களின் முழக்கமும் பழத்தட்டு, இட்லி, வடை ஆகியவற்றைத் தட்டில் வைத்து ஓடிக்கொண்டே வியாபாரம் செய்யும் அன்றாடங் காய்ச்சிகளின் கூச்சலும்- அந்த நிலையத்தைப் பரபரப்புக்கு உள்ளாக்கிக்கொண்டிருந்தன. - மாயூரத்தில் வண்டி மாறி திருவாரூர் வழியாகச் செல் லும் பயணிகளும், அல்லது அதற்கு முன்னுள்ள நிலையங்களில் இறங்கும் பயணிகளும் தாங்கள் ஏறிச் செல்ல வேண்டிய புகை வண்டி தங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்ணுற்று நல்ல வேளையாக அந்த வண்டியைத் தவற விட்டுவிடவில்லை என்ற ஆறுதல் முகத்தில் மின்னிட அந்த வண்டியின் பெட்டி களில் தங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் ஏறி அமர்ந்தனர். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/5&oldid=1702155" இலிருந்து மீள்விக்கப்பட்டது