பக்கம்:ஒரே இரத்தம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒன்னும் பயப்படாதே மாரி! ரத்தக் கொதிப்புதான்! ரெண்டு மூணு நாளைக்கு நடக்காம கொள்ளாம வீட்டிலேயே படுத்துக் கிடக்கணும்” என்று மருத்துவர், மாரிக்கு ஆறுதல் கூறினார். அஞ்சலையின் இமைகள் சிறிதளவு திறந்தன. மாரியும், செங் கமலமும் பெருமூச்சு விட்டுக்கொண்டனர். தனக்கு இரத்தக் கொதிப்பு ஏற்பட்ட காரணத்தை அஞ் சலையின் உதடுகள் வெளியிடாவிட்டாலும், அவளது மனத்தில் அந்தக் காரணம் காட்சியாக உருண்டு கொண்டிருந்தது. மாரியும் பண்ணைக்காரர் வீட்டுக்குப் போய்விட்டார். பொன்னன் வெளியூருக்குப் பண்ணை வேலையாகச் சென்றவன் வீடு திரும்பவில்லை. நந்தகுமார், உடல்நிலை சிறிது தேறியதுமே பொதுக்கூட்டம் நடத்துகிற ஏற்பாடுகளைக் கவனிக்க இளைஞர் குழுவைச் சேர்த்துக்கொண்டு அலைந்து கொண்டிருந்தான். அவ னும் வீட்டில் இல்லை. அப்போது அஞ்சலை, செங்கமலம் இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர். செங்கமலத்தை எங்கும் தனியாக அனுப்ப விரும் பாத அஞ்சலை, வீட்டுக்குத் தேவையான சில சாமான்களை வாங்கு வதற்கு வீராயியின் கடைக்குப் போனாள். வீராயி, அஞ்சலை கேட்டவைகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டே ‘ஏன் அஞ் சலை! நீதான் நல்ல உடம்புக்காரி இல்லியே; இதுக்கெல்லாம் உன் மகள் செங்கமலத்தை அனுப்பக்கூடாதா?” என்று கேள்வி கேட்டு, தன் கலகக் கொடியை லாவகமாக உயர்த்தினாள். அது சின்னஞ்சிறுசு! தெருவில வயசு வந்த பையனுங்க நட மாடிக்கிட்டே இருக்கானுங்க! ஏண்டியம்மா வம்பு! ஒருவேளை யைப் போல இருக்காது!” என்று அஞ்சலை, தனக்கேயுரிய எளிய சுபாவத்தோடு விடை யளித்தாள். 'தெருவிலே போற பயலுங்களுக்குப் பயப்படுறதா பாசாங்கு பண்ணையார் மகன் வூட்டுக்குள்ளேயே வந்துட்டுப் பண்றீங்க! போறான். வீராயி, எகத்தாளமாகக் கொக்கரித்தாள். ‘அபாண்டம் பேசித்தான் இப்படி இருக்கியே! இன்னம் ஏன் வீராயி, இந்த அக்ரமம் எல்லாம் பேசுறே? ஊர் - கொதித்தாள் அஞ்சலை! வீராயி விடுவாளா என்ன? வம்பு இழுப்பது - நேரடியாக மோதுவது - ஜாடை. பேசுவது நல்ல வார்த்தைகளுக்கே நாவில் இடம் தராமல் இருப்பது - குடும் பம் கலைப்பது - இதற்கென்றே சில பெண் ஜென்மங்கள் ஊருக்கு வீதிக்கு ஒன்றிரண்டு - உலகத்தில் இருக்கத்தானே செய் கின்றன. அந்த ரகமல்லவா வீராயி! ஊர் - 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/51&oldid=1702439" இலிருந்து மீள்விக்கப்பட்டது