பக்கம்:ஒரே இரத்தம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“புடிச்சாலும் புளியங்கொம்பைத்தான் பாத்து புடிச்சிருக் கீங்க! நல்லா குடுப்பான் காசு!” ஆ! என்னடி சொன்னே?" அஞ்சலையின் இரத்தம் சூடேறியது! “நம்ப காலனியிலேயே இல்லாத அநியாயம்! ஆனா ரொம்பக் கௌரவமான விபச்சாரம்!'’ வீராயி, இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள்; அஞ்சலை மயக்கமுற்று அந்தக் கடை வாசலிலேயே விழுந்தாள். இந்த நிகழ்ச்சிதான் இரத்தக் கொதிப்பு மிக அதிகமானதற்குக் காரணம். “கொஞ்சம் பரவாயில்லை! அப்படியே தூங்க விடுங்க! கொஞ்ச நாளைக்கு நடக்காம கொள்ளாம பாத்துக்கிங்க!” வைத்தியர், மருந்துப் பையைக் கட்டிக்கொண்டு விடை பெற்றுப் புறப்பட்டார். அஞ்சலையினால் பேச முடிகிற அளவுக்கு வலிவு ஏற்பட்டபோதுகூட வீராயி கூறியவற்றைத் தன் கணவ னிடமோ, நந்தகுமாரிடமோ, செங்கமலத்திடமோ சொல்ல விரும்பவில்லை. அதனால் பெரும் ரகளை ஏற்பட்டு அந்தக் கால னியே போர்க்களமாகிவிடும் என்று அஞ்சலைக்குத் தெரியும். பண்ணையார் தங்கள் வேலைக்கு ஓலை கிழித்துவிட்ட செய் தியையும் மாரி, அஞ்சலைக்கு அன்று சொல்லவே இல்லை. அவ ளுடைய இரத்தக் கொதிப்பு மேலும் அதிகமாகிவிடக் கூடாதே என்ற பயம் மாரிக்கு! அம்பேத்கார் திடலில் நந்தகுமார் ஏற்பாடு நந்தகுமார் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் தடையின்றி நடைபெற்றது. மாரிதான் தடுத்தி ருக்க வேண்டும். பண்ணையாரின் தடித்த வார்த்தைகள், மாரி யையே மாற்றிவிட்டிருந்ததால் அவரிடமிருந்து நந்தகுமார் கூட்டத்திற்கு எதிர்ப்பு ஏதும் எழவில்லை. பக்கத்துக் கிராமங் களில் இருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான ஆதித் திராட மக்கள் சிறிய சிறிய ஊர்வலங்களாகக் கிளம்பி நந்தகுமாரின் கூட்டத்திற்குத் திரண்டு வந்தனர். கூட்டத்திற்கு ஒலிபெருக்கி ஏற்பாடும், மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அதற்கான செலவுகளை மகேஸ்வரன் ஏற்றுக்கொண்டிருந்தான் என்பது நந்தகுமாருக்கும் அவனது இளம் இளம் நண்பர்களுக்கும் மட்டுமே தெரியும். கேட்கப் நந்த பெருக்கி தம்பி, கூட்டத்தில் பேசுவதைக் கேட்க வேண்டுமென்று செங்கமலத்திற்குத் தாங்க முடியாத ஆசை! தான், கூட்டம் போய்விட்டால் அம்மாவைக் கவனித்துக் கொள்வது யார்? வெளியூர் சென்றிருந்த அண்ணனும் இன் னும் திரும்பவில்லை. அப்பாவைக் கெஞ்சிக் கேட்டு அம்மா வைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு, அம்மாவிட மும் அனுமதி வாங்கிக்கொண்டாள். 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/52&oldid=1702440" இலிருந்து மீள்விக்கப்பட்டது