பக்கம்:ஒரே இரத்தம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"" வீராயி பேசியது பேசியது அஞ்சலையின் மனத்தில் பதிந்து கிடந்த தால்; அவள் செங்கமலத்திடம் ஊர்ப்பெண்களோடு சேர்ந்து போகாதேம்மா! நீ தனியாப்போயி, ஒரு மூலையில இருட் நின்னு கேட்டுட்டு QUT! என்று எச்சரிக்கை செய்து டில் மகளுக்கு விடைகொடுத்தாள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மேடையைச் சுற்றிக் குழுமி யிருந்தனர். உயர்ஜாதிக்காரர்கள், ஆதித் திராவிடரல்லாதார் இவர்கள் எல்லாம் தொலைவில் நின்று ஒலிபெருக்கி வாயிலாக நந்தகுமாரின் பேச்சைக் கேட்டனர். - - - இளமையின் எழுச்சி முரசமாக இலட்சியப் பேரிகையாக சாதி சமயச் சச்சரவுகளைத் தூண்டிவிடும் வெறியர்களுக்குச் சாட்டையடியாக அதே சமயம் தாழ்த்தப்பட்ட மக்களைத் தலைநிமிரச் செய்யும் சங்கநாதமாக நந்தகுமாரின் சொற் பொழிவு அமைந்திருந்தது! அனைவருமே வாயைப் பிளந்தவாறு அவன் வீர உரை யைக் கேட்டனர். செங்கமலம் ஒரு இடிந்த மண்டபத்தின் மறைவில் இருட்டில் நின்று தம்பியின் பேச்சைக் கேட்டுப் பூரித்துப் போனாள். ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாற்றி னான் நந்தகுமார்! அவனை ஊக்கப்படுத்த இடையிடையே கையொலிகள்! கூட்டம் முடிவுற்றது. மக்கள் கலைந்து செல்லத் துவங்கி கினர். செங்கமலமும் மண்டபத்தின் மறைவிலிருந்து வீடு நோக்கிச் செல்ல எத்தனித்தாள் மலர்ந்த முகத்துடன்! அப்போது சங்கமலம்' என்ற ஒரு ஆண் குரல் மிக அருகாமையில் ஒலித்தது. திடுக்கிட்டுத் திரும்பினாள். தலையை யும் உடலையும் போர்வையால் மறைத்தவாறு அவளருகே அந்த ஆண் உருவம் நெருங்கி வந்தது! கூச்சல் போட எண்ணி னாள். பிறகு அவளே அசைவற்று நின்றுவிட்டாள். அருகே வந்தது மகேஸ்வரன்தான் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/53&oldid=1702441" இலிருந்து மீள்விக்கப்பட்டது