பக்கம்:ஒரே இரத்தம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ‘நி 9 " ற்காதே! போய்விடு!” என்று நெஞ்சு அதட்டியது செங்கமலத்தை! அந்த ஆணையையும் மீறிக்கொண்டு அவள் நெஞ்சின் வேறொரு மூலையிலிருந்து 'என்னடி பைத்தியமாக இருக்கிறாய்? மகேசுவரனைப் பார்த்தது முதல் அவனை மீண்டும் ஒரு முறை பார்க்கமாட்டோமா? என்று அலைந்துகொண் டிருக்கும் கண்களுக்குச் சொந்தக்காரிதானே நீ? அவன் இப் போது, தவங்கிடந்த பக்தர்களுக்கு வரமருள வந்த புராண காலத்து மகேஸ்வரனைப் போல தரிசனம் கொடுக்க வந்திருக்கி றான்.. நீ ஓடிவிட நினைக்கிறாயே; முடியுமா உன்னால்? எங்கே என்று ஒரு குரல் கிளம்பிற்று. ஓடு புார்க்கலாம்!” ப் ம் அவள் கால்கள் வீட்டை நோக்கி நடக்கத்தான் விரும் பின. ஆனால் அந்தக் கால்கள் நகரமுடியாத அளவுக்கு வலு விழந்து போய்விட்டதை அவள் உணர்ந்தாள். அவளால் அப் போது செய்ய முடிந்தது, அவளது மேலாடையைத் திருத்திக் கொண்டாளே அது ஒன்றுதான்! பண்புள்ள கரங்களுக்கு இயற்கை வழங்கியுள்ள க சக்தியில்லவா அந்தச் செய்கை! - பெண்களின் 'செங்கமலம்! என்னைத் தப்பா நினைக்கிறியா? என்னடா இது? இவ்வளவு இவ்வளவு பெரிய பெரிய வீட்டுப் பையன், திருடனைப்போல போர்வையைப் போர்த்திக்கொண்டு தன்னந்தனியாப் போகிற ஒரு குடும்பப் பெண்ணை இரவு நேரத்திலே வழிமறித்துப் பேசு கிறானேயென்று என் மீது ஆத்திரப்படுகிறாயா?" மகேஸ்வரனின் நா தழுதழுத்தது. மெலிந்த குரலில்தான் பேசினான். செங்கமலத்தின் தலை தானாகக் குனிந்துகொண்டது. அவளுடைய உள்ளங்கைகளில் நீர் ஊறி ஈரமாயின. அவன் கைகளும் அவ்வாறே குளிர்ந்து போயிருந்தன. ஆனால் இருவர் உடலிலும் சூடு பரவிக்கொண்டிருந்தது. இருவர் இதயங்களும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தன. “நான் கேட்பதற்குப் பதில் சொல்லு. என் மேல் கோபமா? 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/54&oldid=1702443" இலிருந்து மீள்விக்கப்பட்டது