பக்கம்:ஒரே இரத்தம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கமலத்தின் குனிந்திருந்த தலை 'இல்லை' என்பது போல் அசைந்தது! "பயமா இருக்கா?” 'ஆமாம்” என்பதற்கு 6 6 அடையாளமாக அவள் மேலும் கீழுமாக ‘அபிநயம்” காட்டி நின்றது. 66 66 தலை ‘என்ன பயம்? ஒருவேளை நான் பேயா? பிசாசா? என்றா?" ‘களுக்’”கென்று சிரித்துவிட்டாள் செங்கமலம். மகேஸ் வரனின் கை, செங்கமலத்தின் கையைப் பிடித்தது. இருவர் கைகளும்• நடுங்கிக்கொண்டிருந்ததை ஒருவருக்கொருவர் உணர்ந் தனர். அவளை, மண்டபத்துக்குள்ளே மெதுவாக அழைத்துச் சென்றான். கையை விடுவித்துக்கொண்டு ஓடிவிட வேண்டு மென்று தீர்மானித்துக்கொண்டாள். அவள் அப்படி நினைக் கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட மகேஸ்வரன், தன் யைத் தளர்த்தினான். அவள் கையை உருவிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் மண்டபத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். பிடி அனால் அவன், அவளது கரத்தை விடுவிக்கத் தயாராக இருந்தும் அவள் அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு பறந்து போகும் புறாவாக மாறவில்லை! வல்லூறின் பிடியிலே சிக்கினால்தானே வெண்புறா துடிதுடிக்கும்! இப்போது மண்ட பத்துக்குள்ளேயிருப்பது ஜோடிப்புறா அல்லவா? மீண்டும் இரு கரங்களும் இறுகின. மண்டபத்தில் எரிந்துகொண்டிருந்த மங்கலான விளக் கின் வெளிச்சத்தில் பெருந்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த சிவசக்தி சிலை அவர்களுக்குப் பின்னால்! சிவனும் சக்தியும் ஆலிங் கன நிலையில் இருந்தனர். தேவியின் மார்பகம் தேவனின் நெஞ்சோடு அழுந்தியிருந்தது. அவளது நூலிடையைத் தேவ னின் கரமொன்று வளைத்துப் பிடித்திருந்த காட்சி; காய்த்த கொடியொன்று கொழுகொம்பில் இறுகப் பிணைந்து படர்ந் திருந்தது போலத் தோன்றியது. நீரணிந்த சிவனாரின் நெற்றி யில் தேவியின் குவிந்த இதழ்கள் மேய்ந்துகொண்டிருந்தன. மகேஸ்வரனும் செங்கமலமும் செங்கமலமும் அந்த சிவசக்தி சிலை உயிர் பெற்றது போல் ஆயினர். அப்படிச் சில விநாடிகள் தான்! அதற்குள் செங்கமலத்தின் தலையில் பல சம்மட்டி அடிகள் தாக்கின. மின்னல் வேகத்தில் தன்னை விடுவித்துக்கொண்டாள். மகேசும் அதிர்ச்சிக்கு ஆளாகி அவளையே நோக்கினான். அவள் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள்! அவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவனது கால் களில் விழுந்தாள். அவன் செங்கமலத்தின் தோள்களைப் பற்றி அன்புடன் தூக்கினான். 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/55&oldid=1702444" இலிருந்து மீள்விக்கப்பட்டது