பக்கம்:ஒரே இரத்தம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னொரு வழியாகச் சென்ற செங்கமலத்துக்கும் மண் பத்துக்கு வெளியே வரவேற்பு காத்துக்கொண்டிருந்தது. “நல்லா இருக்குடியம்மா; ரொம்ப நல்லா இருக்கு! ஒண்ணும் தெரியாத பாப்பா, போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பா! இனிமே இந்தத் தெருவில வயசு வந்த பெண்ணுங்க குடியிருக் கவே லாயக்கில்லே! தூத்தேரி! கர்மகாண்டம்!” - வீராயியின் பேய்க்குரலையும் கழுகுப் பார்வையையும் கேட்டும் கண்டும் செங்கமலம் குன்றிப் போனாள். மேனி முழு தும் குளமாக வியர்த்திட செங்கமலம் வீடு நோக்கி ஓடினாள். எது “முனியாண்டி பார்த்துவிட்டான். நாளைக்குக் காலையில் இந்தச் செய்தியை ஊர் முழுதும் பரப்பிவிடுவான். தந்தை பர மேஸ்வரன் காதிலும் இந்தச் செய்தி விழுந்துவிடும். வீட்டில் பெரிய அமளி காத்துக்கொண்டிருக்கிறது. பரவாயில்லை ; வந்தாலும் சந்திக்கத்தயார் என்ற முடிவிலேதானே நான் இதற் குத் துணிந்தேன். அப்பா சீறுவார்! அம்மா கதறுவாள்! தங்கை தவிப்பாள்! எல்லாம் ஒரு நாளைக்குத்தானே அதைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். - ••கூரிய முள் குத்திவிடும் என்று தெரிந்துதானே மலர் பறிக்கத் தாவுகிறது மங்கையின் கரம்! உயிரைப் பற்றிக் கவலைப்பட்டால் ஆழ்கடல் முத்தெடுத்து அழகான ஆரத்தை அலங்கரிக்க முடியுமா? எந்த நேரத்திலும் இடிந்து விழக் கூடும் என்று அறிந்தும் கூட தங்கம் எடுக்கச் சுரங்கத்தில் இறங்கவில்லையா தொழிலாளி! அதைப் போலவே இலட்சி யத்தை அடைவதற்கு இன்னல்கள், எதிர்ப்புகளை ஏற்றுத் தான் தீரவேண்டும். வாய்ச்சொல் வீரனாக வாழ்வதைக் காட்டி லும் வாய்மை சேர் மனிதனாக வாழ்ந்து மடிவதே மேல்! அவனுக்காக வரலாற்றுப் புத்தகத்தின் சில பக்கங்கள் காத் துக்கொண்டிருக்கும். - வசதிகள் வாய்ப்புக்கள், வளமான வாழ்வு, இவற்றைப் பெற வழுக்கி விழவும் தயாராக இருக்கிற மனிதர்களை மாமி சப் பிண்டங்கள் என்றும், சோற்றால் அடித்த உருவங்கள் என்றும் வர்ணிப்பதற்கு வருங்கால சரித்திரம் எழுதுகோலைத் தீட்டி வைத்துக்கொண்டிருக்கிறது! ஆனந்த ஆனந்த வாழ்வு ஆடம் பரம் அனைத்தையும் இழந்துவிட்டு காகத் துன்பங்களை அனுபவிக்கிற என்னைப்போன்றவர்களை எதிர்காலம்; புகழ் மகுடம் புனைந்து மகிழ்ச்சி பூத்திட வர வேற்கத்தான் போகிறது! எனவே, என்ன ஆனாலும் சரி; என் உறுதியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. - அந்தஸ்து - இப்படி நினைவு அலைகளில் நீச்சலடித்தவாறு வரன், தன் வீட்டை நெருங்கினான். கொள்கைக் மகேஸ் வீட்டின் முன்புறத் திண்ணையில் ஒரே ஒரு மின் விளக்கு மடடும் எரிந்துகொண்டிருந்தது. வழக்கமாகக் காவலுக்குப் 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/58&oldid=1702447" இலிருந்து மீள்விக்கப்பட்டது