பக்கம்:ஒரே இரத்தம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுக்கும் இரண்டு மூன்று பண்ணையாட்கள், திண்ணைக்குக் கீழே தெருவில் உள்ள மேடைகளில் படுத்திருந்தனர். மகேஸ்வர னைக் கண்டதும் அவர்கள் எழுந்து மரியாதை செலுத்தினர். எங்கே? பொன்னன் காவலுக்கு வரவில்லையா?" என்று அவர்களைப் பார்த்து மகேஸ்வரன் கேட்டான். அந்த ஆட் களில் ஒருவன் விடையளித்தான். “பெரிய எஜமான், பொன்னனையும் அவுங்க அப்பன் மாரியையும் வேலையை விட்டு நீக்கிட்டாருங்க! கொஞ்சம் முன் னாடிதான் வெளியூருக்குப் போயிருந்த பொன்னன், காவலுக் குப் படுக்க இங்க வந்தானுங்க! பெரிய எஜமான், அவனை வேண்டாம்னு சொல்லி அனுப்பிச்சுட்டாருங்க!” “ஏன்? என்ன காரணம்?’’ “அந்தப் பையன் நந்தகுமார் மீட்டிங் போட்டதைப் பத்தி அய்யா அந்த மாரிகிட்டே கண்டிச்சாருங்களாம் - மாரி, மறுத்துப் பேசுனாராம்! பேசலாங்களா? அதனால் அப்பனையும் மகனையும் வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாருங்க!” - 'ஓகோ! உங்களைச் சேர்ந்தவுங்க உங்களோடு சேர்ந்து இந்தப் பண்ணையைக் கொழுக்க வச்சவுங்க -- அவுங்களை விரட்டி அனுப்பியாச்சு! நீங்க மாத்திரம் நீங்க மாத்திரம் கருங்காலிகள் மாதிரி, இங்கே வந்து காவலுக்குப் படுத்திருக்கீங்களா? மாரியையும் பொன்ன னையும் விரட்டினது மாதிரி உங்களையும் விரட்ட எவ்வளவு நாள் ஆகும்? கொஞ்சமாவது உங்களுக்கு உணர்ச்சி வேண்டாமா?" 'சின்னய்யா சொல்றதும் சரிதாங்க! இருந்தாலும் வயிறு இருக்குதுங்களே?" 'மானம் பெரிசா? வயிறு பெரிசா?” மகேஸ்வரன் ஆத்திரத்துடன் கேட்டுவிட்டுப் பண்ணை வீட்டின் தோட்டத்துப் பக்கம் திரும்பிச் சென்றான். காவ லாட்கள் ஒருவருக்கொருவர் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டு படுத்துவிட்டனர். கொல்லைப்புறம் கிணற்றடிக்குச் சென்று கை கால்களைச் சுத்தம் செய்வதற்காகவே மகேஸ்வரன் பின்புற வழியாகப் போனான். வெளிச்சமின்றி தோட்டம். இருண்டு கிடந்ததால் அங்குள்ள மின்விளக்குப் பொத்தானை அழுத்தினான். ஒளி பரவி யது. அந்த ஒளியில் அவன் கிணற்றடியில் கண்ட காட்சி... அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. ஆடை குலைந்த நிலையில் திடுக்கிட்டு எழுந்தாள் காமாட்சி! அவளைத் தழுவிக் கிடந்த வாலிபன் கிணற்றின் சுவரில் ஒளிந்து கொண்டான். “யார் அது? மகேஸ்வரனின் குரல் அதிர்ந்தது. 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/59&oldid=1702448" இலிருந்து மீள்விக்கப்பட்டது