பக்கம்:ஒரே இரத்தம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு இலட்சியத்தில் வெற்றி வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சி அந்தப் பயணிகளின் உள்ளத்தில் பரவியிருந்தது. திருவாரூர் செல்லும் அந்த வண்டியில் ஏறுவதற்காக ஒரு இளைஞன் ஒரு கையில் பெரிய கூடை ஒன்றுடனும், மற்றொரு கையில் சிறிய பெட்டியொன்றுடனும் சென்னையிலிருந்து வந்த ரயிலில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான். அந்தப் பெட்டியின் உரை மீது சிகப்பு நூலால் "நந்தகுமார்” என்ற பெயர் அமைக்கப்பட்டிருந்தது. யாருடைய உதவியுமின்றி அவனே தனது பெட்டியுடனும் கூடையுடனும் ரயிலில் ஏறி உட்கார்ந்துகொண்டரன். வயது பதினான்கு அல்லது பதினைந்துதான் இருக்கும். அகன்ற நெற்றி. பெரிய விழிகள். எடுப்பான தோற்றம். பலகாரத்தட்டு வியாபாரி நந்தகுமாரின் அருகே வந்து ‘சூடான வடை!” என்றான். அந்த இளைஞன், கொடு என்று கையையும் காசையும் நீட்டினான். ஒரு தாளில் இரண்டு வடை களை மடித்துக் கொடுத்துவிட்டுக் காசை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு பலகார வியாபாரி, பக்கத்துப் பெட்டி யருகே ஓடினான். நந்தகுமார், தாளில் சுருட்டப்பட்டிருந்த வடையை எடுத்துக் கடித்தான். குளிர்காற்று அடித்துக்கொண்டிருந்த அந்தக் காலைநேரத்துக்கு வடையின் சூடு, அவனுக்கு உற்சாகத்தை அளித்தது. இரவு முழுதும் சரியாகத் தூக்கமின்றி ரயில் பயணம் செய்ததால் பசி சற்றுக் கடுமையாகவே இருந்தது. இரண்டு வடைகளையும் விழுங்கிவிட்டு, அந்தத் தாளிலேயே கையைத் துடைத்துக் கொண்டான். அதற்குள் அவன் ஏறியிருந்த ரயிலும் புறப் பட்டுவிட்டது. கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லை. அருகில் இருந்தவர்களைப் பார்த்தான். யாரிடத் திலும் பிளாஸ்க்கோ அல்லது கூஜாவோ குறைந்தபட்சம் கண்ணாடிப் புட்டியோகூட இல்லை என்பதைப் புரிந்துகொண் டான். சரி; சமாளித்துக்கொள்ளலாம் என்ற நினைவுடன் வடை மடிக்கப்பட்டுக் கசங்கிப் போயிருந்த தாளைச் சரிசெய்து பார்த்தான். அது ஒரு பழைய செய்திப் பத்திரிகை. - சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொடிய நிகழ்ச்சி அந்தக் கசங்கிய தாளில் கொட்டை எழுத்துக்களில் அச்சாகியிருந்தது. அந்தச் செய்தியை நந்தகுமார் சென்னையில் அப்போதே படித்திருக்கிறான். உணர்ச்சி வயப்பட்டிருக்கிறான். இருந்தாலும், நாள் கடந்துவிட்ட அந்தச் செய்தியை இப்போது மீண்டும் ஒரு முறை படித்தான். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/6&oldid=1702156" இலிருந்து மீள்விக்கப்பட்டது