பக்கம்:ஒரே இரத்தம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மகேஸ்வரனால் அங்கு நிற்க முடியவில்லை. எதிரே அரை நிர்வாணக் கோலத்தில் தங்கை நிற்கும்போது எந்த அண்ணனால் தான் அங்கே நிற்க முடியும். “யார் அது? என்று அவன் கேட்ட கேள்விகூட அவனையறியாமல் பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சியின் விளைவு! அந்த வினா திகைப்பு விளைவு! அந்த வினா எழுப்பிய வேகத்திலேயே மின்விளக்குப் பொத்தானை மீண்டும் அழுத்தினான். கொல்லைப்புறம் இருண்டு போய்விட்டது. மகேஸ்வரன் தெருப்பக்கம் செல்வதற்காகத் திரும்பி நடந் தான். கிணற்றுச் சுவரில் ஒளிந்துகொண்டிருப்பவன் யாராக இருக்கும்? மகேஸ்வரன்; இந்தப் புதிருக்கு விடை காணத் துடித் தான். அவன் நினைத்தால் தெருப் பகுதியில் படுத்திருக்கும் ஆட் களையெல்லாம் எழுப்பிவிட்டு காமாட்சியின் கள்ளக் காதலனை அப்போதே பிடிக்கச் சொல்லிவிட முடியும். அப்படிச் செய்தால் காமாட்சியின் நிலை என்ன ஆகும்? நாளைக்கு ஊர் என்ன பேசும்? இதனால் தங்கையின் எதிர்காலமே எனவே பாழாகிவிடக்கூடுமல்லவா? பரபரப்புக்கு இடம் தராமல், யிடமே விவரத்தை அறிந்துகொள்ளலாம் மறுநாள் காமாட்சி என்ற தெருப்புறத் திண்ணையில் ஏறினான். முடிவுடன் இதற்கிடையே, கிணற்றுச் சுவரில் ஒளிந்திருந்தவன் வேலி யோரத்து அடைப்புக்களையும், முட்களையும் பொருட்படுத்தாமல், மழலையொன்று மண்டியிட்டு நகர்வதைப் போல நகர்ந்து கடைசி யாகத் தாண்டிக் குதித்து வெகு தொலைவு ஓடிவிட்டான். இதயம் கனத்துப்போன நிலையில் வீட்டுத் திண்ணையில் உட் கார்ந்த மகேஸ்வரன் செவிகளில் கொல்லைப்புறமிருந்து ஒரு பயங் கர ஒலி கேட்டது. வாரிச் அந்த ஒலி கேட்டு காவலுக்குப் படுத்திருந்தவர்களும் சுருட்டிக்கொண்டு எழுந்தார்கள். யாரோ கிணற்றில் விழுந்த ஒலிதான் அது! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/60&oldid=1702449" இலிருந்து மீள்விக்கப்பட்டது