பக்கம்:ஒரே இரத்தம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமாட்சிதான் விழுந்துவிட்டாள் என்பது மகேஸ்வரனுக்குப் புரிந்துவிட்டது. அவனும், காவலாட்களும் கொல்லைப்புறம் ஓடுவ தற்குள் பண்ணையார் வீட்டுக்குள் எல்லா மின்விளக்குகளும் எரியத் தொடங்கின. பண்ணையாரும் அவர் மனைவியும் பதறித் துடித்துக்கொண்டு ஓடிவந்தனர். மகேஸ்வரன், கிணற்றுக்குள் இறங்கினான். பண்ணையாரும் பார்வதியும் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த முருகா! முருகா! ராமா! ராமா! கடவுளே! கடவுளே!” கதறிக்கொண்டிருந்தனர். மகேஸ்வரன், கிணற்றுக்குள் ஆழமான தண்ணீரில் முழுகிக்கொண்டிருந்த முழுகிக்கொண்டிருந்த காமாட்சியைத் என்று தூக்கிக்கொண்டான். அதற்குள் காவலாட்களில் ஒருவன், மகேஸ்வரனுக்குத் துணையாகக் கிணற்றுக்குள் இறங்கிட முனைந்தான். அவனைப் பண்ணையார் தடுத்துவிட்டார். தடுத்துவிட்டார். தீண்டாதவர்கள் கிணற்றுத் தண்ணீரைத் தொட்டுவிடக்கூடாது – அது மட்டுமல்ல, மகளின் உடல் மீதோ, அல்லது மகனின் உடல் மீதோ அவர்களு டைய கை பட்டுவிடக்கூடாது! அது மகா பாபம்! அந்த ஆபத்தான நேரத்திலும் பண்ணையார் பரமேஸ்வரன் ஆச்சார அனுஷ்டானங்களை விட்டுக்கொடுக்கத் இல்லை. தயாராக கிணற்றுச் சகடையில் இருந்த தாம்புக் கயிறை கட்டையில் ஒரு முனையைக் கட்டி மீதிக் கயிறை கிணற்றுக்குள் விட்டு, அதைப் பிடித்துக்கொண்டு மகேஸ்வரன் காமாட்சியுடன் மேலே வருவ தற்கு அந்த ஆட்கள் உதவினார்கள். ஓரளவு மயக்கமுற்ற நிலை யில் காமாட்சி இருந்தாள் என்றாலும் அவளை மகேஸ்வரன் காப் பாற்றி கிணற்றுக்கு வெளியே கொண்டுவந்துவிட்டான். பார்வதியம்மாள் காமாட்சியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உடலெல்லாம் வெடவெடவென்று ஆடிட அழ ஆரம்பித்தாள். அதற்குள்ளாகக் காவலாட்களிலே இருவர் விரைந்து சென்று வண்டிச் சக்கரமொன்றைக் கழற்றிக் கொண்டு வந்தார்கள். அந்தச் சக்கரத்தில் காமாட்சியை வைத்து மகேஸ்வரன் சுற்றி னான். இதற்கிடையே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பண்ணையார் வீட்டுக் கொல்லையில் கூடிவிட்டார்கள். காமாட்சியின் வாய் வழியாகவும் மூக்கு கிணற்றுத் தண்ணீர் வெளியே வந்தது. அவள் மயக்கம் முற்றிலும் நீங்கியது. கண் விழித்தாள். அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு! 61 வழியாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/61&oldid=1702456" இலிருந்து மீள்விக்கப்பட்டது