பக்கம்:ஒரே இரத்தம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வளவு பேர் சுற்றிலும் நிற்கிறார்களே - அதனால் மெத்த வும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டாள். “ஏன் ஒரேயடியா கூட்டம் போடுறீங்க? ஒண்ணும் நடக் கலே! தாயாரைக்கூட எழுப்பாம தனியா கொல்லைப் பக்கம் வந் திருக்கிறா! கிணற்றிலே தண்ணி மொண்டிருக்கிறா! தவறி விழுந் துட்டா! அவ்வளவுதான்! எல்லாம் போங்க! போங்க!’' என்று பண்ணையார் சற்று உரத்த குரல் எழுப்பினார். அக்கம் பக்கத்துக்குக்காரர்கள் பண்ணையார் பேச்சுக்குப் பதில் பேச்சு பேசாமல் ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். காமாட்சியைப் பார்வதியம்மாள் அழைத்துக்கொண்டு பின் புற வழியாகவே வீட்டுக்குள் போனாள். “தண்ணி மொண்டிருக்கிறா! தவறி விழுந்துட்டா!” என்று தன் தந்தை சொன்ன வாசகத்தின் பிற்பகுதியில் உள்ள உண் மையை மகேஸ்வரன் எண்ணிப் பார்த்திடத் தவறவில்லை. அவ னும் தாய் தந்தையருடன் வீட்டுக்குள் வந்தான். “நீ போயி டிரஸ் மாத்துப்பா! காயம் கீயம் ஒண்ணு மில் லியே! நான் காமாட்சியைக் கொண்டு போயி படுக்க வைக்கி றேன். பார்வதியம்மாள் பரிவுடன் கூறிவிட்டு, மகளை அழைத் துக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தாள். பண்ணையார் பரமேஸ்வரன் நடுக்கூடத்தில் கிடந்த சோபா வில் மிகுந்த சோர்வுடனும் பதைப்புடனும் உட்கார்ந்தார். சிறிது நேரம் அந்த வீட்டில் அமைதி நிலவியது. அந்த அமைதியை விரட்டுவது போல குழந்தை வீறிட்டு அழுதது. பார்வதியம்மாள், தன் அறையிலிருந்து காமாட்சியின் அறைக்கு விரைந்தோடி குழந் தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தினாள். புட்டிப் பாலை எடுத்துக் கொடுத்து அதைத் தூங்க வைக்க முயற்சி செய்தாள். நனைந்த உடைகளை மாற்றிக்கொண்டு மகேஸ்வரன் கூடத் திற்கு வந்து தன் தந்தைக்கு எதிரேயிருந்த சோபாவுக்குப் பின் னால் நின்றுகொண்டு தந்தையின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். காமாட்சி, பார்வதியின் அறைக்கதவுக்குப் பின்னிருந்து அப்பாவையும் அண்ணனையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். கிணற்றில் விழுந்து எழுந்த வலியும் களைப்பும் அவளை வாட் டிக்கொண்டிருந்தபோதிலும், தன்னைப் பற்றித் தந்தையிடம் அண்ணன் என்ன சொல்லப் போகிறார் என்பதிலே அவ்வளவு கவலை அவளுக்கு இருந்தது! பண்ணையார் மகேஸ்வரன் முகத்தைப் பார்த்தார். மக னிடம் என்ன பேசுவதென்றே அவருக்குப் புரியவில்லை. 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/62&oldid=1702457" இலிருந்து மீள்விக்கப்பட்டது