பக்கம்:ஒரே இரத்தம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நாளைக்கு ஊர் முழுக்க விஷயம் பரவிடும்" - நீண்ட நேரத் துக்குப் பிறகு அவர் கூறியது இது! பெருமூச்சு! தலையிலே கையை வைத்துக்கொண்டார்! “எல்லாம் உங்க பிடிவாதத்தினாலே வந்த வினை தானே அப்பா! ‘‘வினை! இந்த வார்த்தை காமாட்சியின் காதுகளில் விழுந்ததும் அவள் கலங்கிப் போனாள். அண்ணன், கிணற்றடியில் கண்ட காட்சியைத் தந்தையிடம் சொல்லப் போகிறான் என்று முடிவு கட்டிக்கொண்டு மன மொடிந்து போனாள். ‘‘என்னப்பா என் பிடிவாதம்? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு! பண்ணையார் குரல் கடுமையாக ஒலித்தது. காமாட்சிக்கு வயசு என்ன? பெரியவளாகி எத்தனை வரு ஷம் ஆகுது? இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தீங்களா? அவ ளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்னு உங்க மனசிலே தோணவே இல்லியே! உங்களுக்கு ஏற்றபடி எங்க அம்மா!” 14 "" மகேஸ்வரனின் வாயிலிருந்து அடுத்த வார்த்தைகள் எப் படி வரப்போகின்றன அதனால்தான் காமாட்சி தவறிவிட் டாள்! அந்தக் கண்றாவிக் காட்சியைத்தான் நான் கிணற்றடி யில் பார்த்தேன்' - இப்படித்தான் அவன் முடிக்கப் போகிறான் என்று நினைத்து காமாட்சி தணலில் நின்றுகொண்டிருந்தாள். ஆனால் மகேஸ்வரன், கிணற்றடியில் தான் கண்ட காட்சி பற்றி எதுவுமே ஜாடையாகக்கூடக் குறிப்பிடவில்லை. 'நான் என்னடாப்பா பண்ணிட்டேன்? என் மேல ஏன் பழியைப் போடுறே? பார்வதியம்மாளும் கூடத்திற்கு வந்து அந்த உரையாடலில் கலந்துகொண்டாள். “தான் இருப்பதே தன் தகப்பனுக்கும் தாய்க்கும் ஒரு சுமை யென்று காமாட்சி முடிவு செய்திருக்கிறாள். நீங்களோ, யாராவது காமாட்சியைப் பெண் கேட்க வந்தால் கருமியாகி விடுகிறீர்கள்! ஆனால் எனக்குப் பெண் கொடுக்க வருகிறவர்களிடம் பேராசைக் காரர்களாக மாறிவிடுகிறீர்கள்! வரதட்சணை என்ற பேச்சுக்கே இடமில்லையென்று சொல்லியிருந்தால் உங்கள் கொள்கையை நான் வரவேற்றிருப்பேன். பெண்ணுக்கு வரதட்சணை தரமாட்டேன்! என் பிள்ளைக்கு மட்டும் வரதட்சணை கொடு! அதுவும் வாரி வாரிக் கொடு! இப்படியொரு நிலையெடுத்தால் அது என்னப்பா நியா யம்? என்னம்மா நியாயம்? உங்க கருமித்தனத்தையும் பேராசைக் 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/63&oldid=1702458" இலிருந்து மீள்விக்கப்பட்டது