பக்கம்:ஒரே இரத்தம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணத்தையும் நான் நான் புரிஞ்சுகிட்டேன். பொறுத்துகிட்டேன். காமாட்சி; பாவம் பெண்தானே! இந்தக் குடும்பத்துக்கு; தான் ஒரு சுமையாக இருக்கக்கூடாதென்று தீர்மானித்திருக்கிறாள். இல்லேன்னா அவள் ஏன் கிணற்றில் விழுகிறாள்? . தான் கண்டதையே அடியோடு மறைத்துவிட்டு - அண்ண னுக்கு எதிராக இப்படி நிலைகுலைந்து நின்றோமே என்ற அவ மானம் தாங்காமல் கிணற்றில் விழுந்த உண்மையையும் ஒளித்து விட்டு மகேஸ்வரன்; விவகாரத்தையே வேறு திசைக்குத் திருப்பி விட்டது கண்டு காமாட்சி ஆறுதலடைந்தாள். - ‘'சரி! சரி! நாளைக்கே ஒரு மாப்பிள்ளையைப் பாரு! அவன் எவ்வளவு வரதட்சணை கேட்டாலும் சரி; கொடுத்துத் தொலைக்க நான் தயாராயிருக்கேன். மகேஸ்வரா! இது ஒண்ணும் நான் விளையாட்டுக்குச் சொல்லலே! உண்மையாவே சொல்றேன்; உடனே நீயே எல்லா ஏற்பாடுகளையும் கவனி! பண்ணையார் முடிந்த முடிவாக மகனிடம் இதைக் கூறி விட்டுக் கூடத்தை விட்டு எழுந்து சென்றார். அவர் மாடிப்படிகளில் ஏறி மேலே செல்லும் வரையில் அவரையே பார்த்துக்கொண்டு நின்ற மகேஸ்வரனின் மனம் எத் தனையோ குழப்பங்களால் அலைமோதிக்கொண்டிருந்தது. பார்வதி யம்மாளும், 'முருகா! ராமா!” என்று முணுமுணுத்துக் 6 6 கொண்டே தன் அறைப்பக்கம் சென்றாள். மகேஸ்வரன், மாடிப்படிகளில் இன்னொரு பகுதி வழியாக ஏறி, தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். பார்வதியம்மாள் வந்தவுடன், காமாட்சி அந்த அறையி லிருந்து புறப்பட்டு தன்னுடைய அறைக்குக் கிளம்பினாள். காமாட்சி அவள் அறைக்குள் சென்றுவிட்டாள் என்று தெரிந்த பிறகு, பார்வதி மெதுவாகச் சென்று கொல்லைக் கதவையும் தெருக் கதவையும் உட்புறமாகப் பூட்டி சாவியை இடுப்பில் வத்துக்கொண்டு திரும்பி வந்து “அப்பாடா!" என்று படுக்கை யில் சாய்ந்தாள். 66 8 மகேஸ்வரனுக்குத் தூக்கம் வரவில்லை. கண்கள் மட்டும் மூடியிருந்தன. 'அவன் யாராக இருக்கும்? அப்பா, எவ்வளவு வரதட்சணை தருவதற்கும் தயார் என்று கூறிவிட்டார். அடுத்த கட்டம் காமாட்சியின் கையில் தானிருக்கிறது! ஒருவேளை; அவள்- தான் காதலித்தவனைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் பிடித்துவிட்டால்? அதனால் என்ன? அதையும் அப்பாவிடம் சொல்லி அவரைச் சம்மதிக்கச் செய்யவேண்டியதுதான்! காமாட்சி யின் காதலன் வேறு சாதியைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால்; தந்தையின் சம்மதம் எப்படிக் கிடைக்கும்? கிடைக்கவே கிடைக் காது!” இப்படி அவன் உள்ளம் உறுதியாகக் கூறியபோது; “ஏன் கிடைக்காது? என்னை மணக்க மட்டும் உங்களுக்கு உங்கள் தந்தை 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/64&oldid=1702459" இலிருந்து மீள்விக்கப்பட்டது