பக்கம்:ஒரே இரத்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமதி வழங்கிவிடப் போகிறாரோ? நான் மட்டுமென்ன உங்கள் சாதியா?” என்று கேட்டவாறு செங்கமலம், அவனது அகக்கண் முன்னே தோன்றினாள். கொண்ட “நான் பரவாயில்லை; ஆண்மகன்! அப்பாவை எதிர்த்துக் கொண்டு வெளியேறிவிடலாம்! காதலுக்காகவும், கொள்கைக்காகவும் என் சொந்தபந்தங்கள் சொத்துக்களையெல் லாம்கூடத் தியாகம் செய்துவிடலாம். ஆனால் காமாட்சியால் அந்த அளவுக்கு எதிர்த்து நிற்க முடியுமா?” அவன் மனப்புயல் தொடர்ந்தது! “உனக்காகப் போராடும்போது, உன் தங்கைக்காகவும் நீ ஏன் போராடக்கூடாது? மகேஸ்வரன் கண்களைத் திறந்தான். அறையைவிட்டு வெளியே வந்தான். தங்கையைத் தனியாகச் சந்தித்து அவளு டைய காதலன் யார் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள விரும் பினான். தந்தையின் அறைக் கதவைப் போய்ப் பார்த்தான். மூடிக்கிடந்தது. விளக்குக்கூட அணைக்கப்பட்டிருந்தது. மாடியிலிருந்து சந்தடியில்லாமல் இறங்கினான். தாயார் தூங்கி விட்டாளா என்று கவனித்தான். அந்த அறையின் கதவு சிறிது திறந்திருந்தது. மங்கலான விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந் தது. பார்வதியம்மாள் நன்றாகத் தூங்கிக்கெரண்டிருந்தாள். காமாட்சியின் அறையை நோக்கி நடந்தான். அறை தாளிடப் பட்டிருந்தது. உள்ளே விளக்கு எரிவது மேலேயுள்ள வண்ணக் கண்ணாடிகள் மூலம் அவனுக்குத் தெரிந்தது. அறைக் கதவைத் தள்ளிப் பார்த்தான். டால் கதவு அசையவில்லை. தட்டினால் தாயார் விழித்துக்கொண் என்ன செய்வது என்ற அச்சம் வேறு! அறைக்குள்ளே குழந்தை முணகி அழும் ஒலி, விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந் தது. தங்கை விழித்துக்கொண்டிருந்தால் கதவை மெதுவாகத் தட்டியதும் வந்து திறந்துவிடுவாள். தூங்கியிருந்தால் பயனில் லாமல் போய்விடும். தூங்குகிறாளா என்பதை எப்படி அறிந்துகொள்வது? கத வின் சாவித்துவாரம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அதன் வழி யாக அவள் தூங்குகிறாளா; அல்லது விழித்துக்கொண்டிருக்கிறாளா என்று பார்த்துவிடத் தீர்மானித்தான். அவனது விழிகளில் ஒன்று சாவித்துவாரம் வழியாக அறைக்குள்ளே பாய்ந்தது! அய்யய்யோ மீண்டும் அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியா? - காமாட்சி, திரும்பி உட்கார்ந்த நிலையில் குழந்தையை அணைத்துக்கொண்டு அதற்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண் டிருந்தாள். 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/65&oldid=1702460" இலிருந்து மீள்விக்கப்பட்டது