பக்கம்:ஒரே இரத்தம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அதை அதைவிட பயங்கரம்! குழந்தைக்குத் தாயாகி யும் அந்த வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் தானே வளர்க்கிற அளவுக்குத் தந்திரமும் கற்றிருக்கிறாள். மாதா கோயிலில் எரிகிற மெழுகுவத்தியைப் பார்க்கும் போது அது எவ்வளவு குளுமையாக எரிகிறது என்று பாராட் டத் தோன்றுகிறது. தீவட்டி வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிற ஏற்படுகிற வெறுப்பு மெழுகுவத்திச் சுடரில் நிச்சயம் ஏற்படுவதில்லை. அதற்காக மெழுகுவத்திச் சுடரில் விரலை வைத் தால் பனிக்கட்டியில் வைத்தது போலவா இருக்கிறது? விரல் கொப்பளித்துப் பழுத்துத்தானே போய்விடுகிறது! தன் தங்கை காமாட்சி கொளுத்தப்படாத மெழுகு வத்தியென நம்பிக்கொண்டிருந்த மகேஸ்வரன், அவள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கிற மெழுகுவத்தி என்பதை அந்த ஒரே இரவில் தெளிவாக உணர்ந்துகொண்டான். அறைக்குச் சென்று படுக்கையில் உடலைச் சாய்த்தான். வானம் உறுமிக்கொண்டிருந்தது! பலகணி வழியாக மின்னல் ஒளி அவன் கண்ணைப் பறிக்குமளவுக்குப் பாய்ந்து கொண்டி ருந்தது. மின்னலை விட வேகமாக அவன் நெஞ்சில் கள் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கு விடையாகவோ; விளக்க மாகவோ அவனுக்குக் கிடைத்தது இடியொலிகள்தான்! கேள்வி வயல் வெளியில் கண்டெடுத்த குழந்தைக்குக் காமாட்சி எப்படித் தாயாக இருக்க முடியும்? அவள் கருவுற்றிருந்த போது இந்த வீட்டில் பார்வதியம்மாளுக்கு அந்த ரகசியம் எப்படித் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்க முடியும்? ஒருவேளை தாயாருக்குத் தெரிந்த ரகசியமாகவே இருக்குமா? கணவனி டம் அளவற்ற அன்பும் அதேபோல பயபக்தியும் கொண்ட தன் தாயார், இவ்வளவு துணிச்சலாக கணவனின் கண் களைக் கட்டிவிட்டு மகளைக் காப்பாற்ற எப்படி முன்வந்திருக்க முடியும்? - ஒரு வேளை, தாயார் தந்தை இருவருக்குமே தெரிந்து இருவருமே சேர்ந்து ஊரார் கண்களில் பொடியைத் பொடியைத் தூவிக் கொண்டிருக்கிறார்களா? சாத்திர சம்பிரதாயத்திற்கு விரோதமாக எள்முனை யளவு காரியம் நடந்தால்கூட பாம்பை மிதித்தவர் போலப் பதைபதைப்புக் கொள்ளும் தந்தையார் தந்தையார் இந்தச் செயலுக்கு எப்படி ஒப்புதல் அளித்திருக்க முடியும்? இதற்கெல்லாம் யாரிடத்திலே பதிலைத் தேடுவது? காமாட்சியிடம் கேட்க முடியுமா? ஒரு சகோதரன் தன் சகோதரியிடம் விசாரிக்கக் கூடிய விவரங்களா இவைகள்? வேறு வழிதான் என்ன? ஒரே ஒரு வழிதான் புரிகிறது! 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/67&oldid=1702462" இலிருந்து மீள்விக்கப்பட்டது