பக்கம்:ஒரே இரத்தம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து மகேஸ்வரன், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். விளக் கைப் போட்டான். மேஜையில் இருந்த ஒரு படத்தின் மீது அவன் பார்வை பாய்ந்தது. அந்தப் படத்தில் ஒரு ஆணும் பெண்ணும்! மணக்கோலத்தில் எடுத்த நிழற்படம்! சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றும் சோமுவும் மகேஸ்வரனும் இணைபிரியாத நண்பர்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் சோமு, வேணியைத் திருமணம் செய்துகொண்டான். வேணியும் வழக்குரைஞர் தாழிலில் ஈடுபட்டவள்தான். தன் கணவனின் உயிர் நண்பன் என்ற முறையில் வேணி மகேஸ்வரனிடம் வற்றாத பாசமும் வாஞ் சையும் கொண்டவள். திருமணத்திற்குப் பிறகு மகேஸ்வரனின் அழைப்பையேற்று இரண்டு தடவை சோமுவும் வேணியும் அம்பல் கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு தடவையும் நாலைந்து நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். சோமுவும் மகேசும் நண் பர்களானதைப் போலவே கிராமத்திற்கு வந்து தன் வீட் டில் தங்கிய வேணியிடம் நெருங்கிப் பழகியிருந்தாள் காமாட்சி! எல்லோரிடமும் கலகலவென்று சிரித்துப் பேசி அவர்களுடைய உள்ளத்தில் இடம்பிடித்துவிடக்கூடிய நவநாகரீகப் பெண்ணாக வேணியிருந்தாலும் கூட பண்பாடு மிக்கவள் என்று பள்ளிப் பருவத்திலிருந்தே நற்சான்று பெற்றவள். - மகேஸ் அந்த இருவரும் மணக்கோலத்தில் புன்னகை ததும்ப நிற்கும் படத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வரன்; அவர்கள் தன் எதிரே நிற்பது போலவே கருதிக் கொண்டு அவர்களுடன் உரையாடினான். 6 - 'சோமு! வேணி! நீங்கள் இருவரும்தான் இந்தக் குழப் பத்திலிருந்து என்னை விடுவிக்க முடியும். நீங்கள் என் நீங்கள் என் வேண்டு கோளையேற்று உடனே இந்தக் கிராமத்திற்கு வந்தாக வேண் டும். அந்த வழக்கு இருக்கிறது - இந்த வழக்கு இருக்கிறது என்றெல்லாம் சொல்லித் தட்டிக்கழிக்கக் கூடாது. என்னு டைய உள்ளத்தை சோமு! உன்னிடம்தான் திறந்துகாட்ட முடியும்! காமாட்சியின் கதையென்ன என்பதையும் வேணி ஒருத்தியால்தான் தெரிந்துகொள்ள முடியும். ஒரு நாலு நாள் என் வீட்டில் தங்கும்படியாக நீங்கள் வந்தால் எல்லாப் புதி ருக்கும் விடை கிடைத்துவிடும். - தான் பேசிக் உணர்ந்து வெட்கம் கலந்த தன்னையறியாமல் படத்தின் முன்னே கொண்டிருப்பதை மகேஸ்வரன் பெருமூச்சு விட்டுக்கொள்கிறான். காலையில் பூந்தோட்டம் அஞ்சல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். தொலைபேசி வாயிலாகச் சோமுவிடமும் வேணி யிடமும் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை உட னடியாக அம்பல் கிராமத்துக்கு வரச் செய்ய வேண்டும். அதன் பிறகே எல்லாம் சரியாகும். 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/68&oldid=1702463" இலிருந்து மீள்விக்கப்பட்டது