பக்கம்:ஒரே இரத்தம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த முடிவுடன் மகேஸ்வரன் செய்தான். தூங்குவதற்கு முயற்சி இருளில் வானம் வேகமாக இடி முழக்கம் செய்துகொண் டிருந்தது. மழையும் தொடர்ந்து பொழிய ஆரம்பித்தது. மாரி வீட்டில் செங்கமலமும், நந்தகுமாரும் தாயார் அஞ்சலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர். அஞ்சலை, சிகிச் சைக்குப் பிறகு சற்று நலம் பெற்றிருந்தாலும் களைப்புற்றே காணப்பட்டாள். மாரி, மாரி, ஒரு கிழிந்த பாயில் அழுக்குத் தலை யணையொன்றை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். மழைத்துளிகள் வீட்டுக் கூரையிலிருந்து ஆங்காங்கு சொட் டிக்கொண்டிருந்தன. செங்கமலம் பானைகளையும், சட்டிகளையும் அந்த இடங்களில் வைத்து ஒழுகும் தண்ணீரால் வீட்டின் தரை நனைந்துவிடாமல் பாதுகாத்தாள். மீண்டும் அஞ்சலை யின் அருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். அஞ்சலை, செங்க மலத்தின் கையை அழுத்திப் பிடித்தாள். “அம்மா!” என்றாள் மகள்! "செங்கமலம்! எனக்கொன்னும் சாகிறதைப்பத்தி கவலை யில்லம்மா! உன்னை ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத் துட்டா அப்பறம் நிம்மதியா கண்ணை மூடிடுவேன். தியா 86 ‘அதைப் பத்தி இப்ப ஏன்ம்மா அலட்டிக்கிறீங்க? அமை தூங்குங்கம்மா!” செங்கமலத்தின் கண்கள் கலங்கின. நந்தகுமாரின் முகத்திலும் சோக ரேகைகள் யோடின. “வெளியூருக்குப் போனானே; உங்க அண்ணன் .. இழை பொன் னன், இன்னம் வரலியா?” என்று கேட்டு வாய் மூடுவதற்குள் "HLDLDIT!" அம்மா!' என்று அழைத்தவாறு பொன்னன் உள்ளே நுழைந்தான். காவல் மழையால் அவன் உடைகள் நனைந்திருந்தன. “எப்படாப்பா வந்தே? இன்னைக்குப் பண்ணையார் வீட்ல இல்லியா?” ஈனக்குரலில் அஞ்சலை விசாரித்தாள் மகனை! பொன்னன் அலட்சியமும் ஆத்திரமும் கலந்த தொனி யில் “பண்ணையார் வீட்டிலே, எனக்கும் அப்பாவுக்கும் இனிமே எப்போதுமே வேலையில்லை' என்றான். 'ஆ! என்னடா விபரீதம்?” என்று பதறினாள் அஞ்சலை! இரத்தக் கொதிப்பு அதிகமாயிற்று! அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/69&oldid=1702464" இலிருந்து மீள்விக்கப்பட்டது