பக்கம்:ஒரே இரத்தம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுப்புரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை. கடைத் தெருவும் வீடுகளும் எரிந்து சாம்பலாயின. -இந்தச் செய்தியைத்தான் அந்த ஏடு விரிவாகவும் விளக்க மாகவும் வெளியிட்டிருந்தது. கசங்கிவிட்ட அந்தப் பழைய தாளில் தலைநீட்டிக்கொண்டிருந்த ஒவ்வொரு எழுத்தின் மீதும் நந்தகுமாரின் கூரிய பார்வை ஆழமாகப் பதிந்தது. 6 - பாடு ஏற்கனவே தாகத்தால் வரண்டுவிட்டிருந்த அவன் நாக் கும் தொண்டையும் மேலும் வரண்டு காய்ந்து போயின. காந்தி யடிகள் பிறந்து, தாழ்த்தப்பட்டோர் “கடவுளின் மக்கள்' என்று கூறிப் பிரச்சாரம் செய்தபிறகும் அந்த மக்களின் உரிமைக்காக அம்பேத்கார் போர்க்கொடி உயர்த்திப் பட்ட பிறகும் இந்தியாவில் எந்த மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமையும் அதன் விளைவாக அமளிகளும் இருந்தாலுங்கூட அந்த வேதனைக்குத் தமிழகத்தில் இடமிருக்கக்கூடாது என்று பெரியாரும் அண்ணாவும் வாழ்நாள் முழுதும் பணியாற்றிய பிறகும் - - விழுப்புரங்கள் நடைபெறுகின்றனவே! இந்த ஏக்கம் அவனது அவனது அடிவயிற்றிலிருந்து பெருமூச்சாக வெளிப்பட்டது. மாயூரத்தை வந்து சேருவதற்கு முன்பு சிதம்பரம் ரயி லடியில் வண்டி சிறிது நேரம் நின்றது. அப்போது தூங்காமல் விழித்துக்கொண்டிருந்த நந்தகுமாரின் மனக்கண்ணின் முன் னால் நந்தனார் கதை படம்போல ஓடிக்கொண்டிருந்தது. - - எனக் வேதியரிடம் விடை பெற்று நந்தனார், நடராசனைத் தரி சிக்கத் தில்லைநகர் ஓடி வருகிறார். சிதம்பரம போகாமல் இருப் பேனோ என் ஜென்மத்தை வீணாய்க் கெடுப்பேனோ கூறி ஒடோடி வருகிறார். கோயிலுக்கு வெளியே நின்று ஆண்ட வனை வழிபடத் துடிக்கிறார். ஆனால் அவருக்கும் விக்கிரகத் துக்கும் நடுவிலே நந்தியின் சிலையொன்று தடையாக அமைந் திருக்கிறது. சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக் குது என்ற பாடல் இசையுடன் ஒலிக்கிறது. நந்தனாரின் பக் திக்கு மெச்சிய இறைவன் நந்தியை விலகிக்கொள்ளச் சொல்லி தன் முழு உருவைக் காணுமாறு செய்கிறார். - நந்தகுமாரின் இளம் உள்ளத்தில் பகவானே பதில் அளிக்க முடியாத கேள்வியொன்று! நந்தியை எதற்காக விலகச்சொல்ல வேண்டும்? “நந்தா! உள்ளே OUT!" என்று ஆண்டவன் அவரை அழைத்திருக்கத்தானே வேண்டும். அதுதானே முறை. நந்தி விலகட்டும்; நந்தனார் தெருவில் நின்றவாறே தன்னை வணங்கட்டும் என்றால் கடவுளேகூட சாதியெனும் கொடுமைக்குக் கட்டுப்பட்டுத்தானே இருந்திருக்கிறார்! இல்லாவிட்டால் உலகில் எல்லோரும் தண்ணீரில் குளித்துவிட்டுத் தன்னை அருகில் வந்து வழிபடலாம் என்று இணங்கிய எம்பெருமான்; நந்தனார் மட்டும் நெருப்பில் இறங்கிக் குளித்துவிட்டு நீசத் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/7&oldid=1702157" இலிருந்து மீள்விக்கப்பட்டது