பக்கம்:ஒரே இரத்தம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீது நெளிந்து வரும் காட்சியைத் தொலைவிலிருந்து நாள்தோறும் ரசித்து மகிழ்ந்ததை மாரியினால் மறந்துவிட முடியுமா? பொன்னனோ, செங்கமலமோ, நந்தகுமாரோ, பிறந்த போதெல்லாம் பச்சைக் குழந்தைகள் என்றும் பாராமல் தூக்கிக் கொண்டு வந்து, வயலோரத்து மரக்கிளைகளில் துணியால் தொட் டில் கட்டி அதில் போட்டுவிட்டுக் கணவனுடன் சேர்ந்து உழவு வேலைகளில் ஈடுபடுவாளே; அந்தச் சலியாத உழைப்பை எண்ணி யெண்ணி மாரி பெருமைப்பட்ட காலமெல்லாம் மனத்திரையை விட்டு மறைந்துவிடக்கூடியதா? ‘அம்மாவின் இரத்தக் கொதிப்பு அதிகமாகித் திடீர் என்று இறந்துவிட்டதற்கு நான்தானே காரணம்! நான் பொதுக்கூட்டம் போட்டுப் பேசாவிட்டால்; அப்பாவையும் அண்ணனையும் பண்ணை யார் வேலையை விட்டு விலக்குவாரா? அந்த அதிர்ச்சிதானே அம்மாவைப் பாதித்து விட்டது!” நந்தகுமாரின் நெஞ்சம் புலம்பியது. 'பண்ணையார் மகனுடன், என் தகுதியை மறந்து பழகி விட்டதுதானே இவ்வளவு விபரீதத்துக்கும் காரணம். இல்லா விட்டால் அந்த வீராயியும் முனியாண்டியும் எங்க அம்மாவை இப்படிக் கொதிப்படையச் செய்திருக்க முடியாதே! அவமானம் வந்துவிட்டதேயென்றுதானே விட்டுப் போய்விட்டார்கள்?" மகளால் அம்மா எங்களை செங்கமலத்தின் இருதயம் இப்படி அழுதது. மழையின் வேகம் அதிகரித்தது. இடியும் மின்னலும் ஓயவே இல்லை. அந்தக் காலனி, சிறியதோர் ஏரி போலாயிற்று. அந்த ஏரி யில் இருளில் மிதக்கும் படகுகளைப் போல காலனிக் குடிசைகள் பெருங்காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. இரவு முழுதும் மழை விடவில்லை. தூறல் நின்றபாடில்லை. பொழுது விடிந்தும் அந்தக் கிராமம் முழுவதுமே பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருந்தது. பஞ்சாயத்துச் சாலைகள் எல்லாம் கூடத் துண்டிக்கப்பட்டுப் போயின.ஒவ்வொரு வயலும் ஒரு குளம் போலாகியது. அஞ்சலையின் உடலை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றன. முனியாண்டி, வீராயி இருவர் மட்டும் அந்த வீட்டுப்பக்கம் வரவே இல்லை. காலனியில் உள்ள உற்றார் உறவினர், அக்கம்பக்கத்து ஊரில் உள்ள சொந்தக்காரர்கள் எல்லோருமே வந்து சேர்ந்து விட்டனர். 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/73&oldid=1702469" இலிருந்து மீள்விக்கப்பட்டது