பக்கம்:ஒரே இரத்தம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்துக் கெஞ்சும் குரலில் பேசினான. அவனது நா, தழுதழுத் தது! இடையிடையே உணர்ச்சியை அடக்கிக்கொள்ள முடியாமல் அழுதான். - “அய்யா! பெரியவர்களே! என் தாயின் சவத்தை அமைதியாக அடக்கம் செய்ய வழிவிடுங்கள்! அதோ, அந்த வழக்கமான பாதை பகவானால் புறக்கணிக்கப்பட்ட இந்தப் பாவிகள் செல்ல வேண்டிய பாதை வெள்ளத்தால் மூழ்கிக் கிடப்பதைப் பாருங்களய்யா! தயவுசெய்து கண்ணைத் திறந்து பாருங்களய்யா! மனமிரங்கி வழிவிடுங்கள்!’ - நந்தகுமாரின் உள்ளமுருக்கும் கோரிக்கையை அந்தத்தெரு வினர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை! “மரியாதையா திரும்பிப் போங்க! இல்லேன்னா, பிணத்தைப் பாடையோட கீழே தள்ளி உருட்டுவோம்!” இந்த மிரட்டலைக் கேட்டவுடன், பொன்னன் பொங்கி யெழுந்தான். 'உருட்டுவீங்க! உருட்டிப் பாருங்க; என்ன நடக்குதுன்னு தெரியும்! உருட்டுறவன் தலை முதல்லே உருளும்!” பெரிய விபரீதம் ஏற்படப் போகிறது என்ற அச்சம் ஆட் கொள்ள மாரி, துடிதுடித்துப் போய் பொன்னனை அமைதிப் படுத்த ஓடினார். - "சும்மா இருங்கப்பா! திரும்பிப் போறதாம் - திரும்பி! அரி ஜனப் பிணம்ன்னா அவ்வளவு கேவலம்! அது வந்த வழியே திரும்பிப் போகணுமா? முடியவே முடியாது! இந்த வழியாத்தான் போய் ஆகணும்!” பொன்னன் மேலும் சீறினான். , மாரி, அந்தத் தெருவில் உள்ளவர்களைப் பணிவோடும், பரிவோடும் பார்த்து; "அய்யா! மன்னிச்சுக்கிங்க! இது சாவு சமாச்சாரம்! ஏற்கனவே துக்கத்திலே இருக்கிற எங்களை மன் னிச்சுக் கொஞ்சம் ஆறுதலா வழியை விடுங்க! மழை பேஞ்சி, வெள்ளம் வந்து பாதையை மூடாம இருந்தா நாங்க அந்த வழியாத்தானே போயிருப்போம். கொஞ்சம் கருணை காட்டுங்க புண்யவான்களே!" என்று வேண்டினார். ❝ - "ஏ, கிழவா! உனக்கும் ஒரு பாடை கட்டுவோம் மரி யாதையா திரும்பிப் போங்க! அவ்வளவுதான் சொல்ல முடி யும்.' மாரியின் வேண்டுகோளுக்குக் கிடைத்த பதில் இப்படித் தான் இருந்தது. உருக்கமாகவும் அமைதியாகவும் பேசித் தோற்று விட்ட நந்தகுமார் வீராவேசங் கொண்டான். "உயர்ந்த சாதிப்பிணம் செல்ல ஒரு வழி - தாழ்ந்த சாதிப் பிணம் செல்ல ஒரு வழியென்று வகுத்தது யாரய்யா? உயர்ந் 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/75&oldid=1702471" இலிருந்து மீள்விக்கப்பட்டது