பக்கம்:ஒரே இரத்தம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோனைப் புதைக்க - எரிக்க - ஒரு இடுகாடும் சுடுகாடும்; தாழ்ந் தோனைப் புதைக்க எரிக்க மற்றொரு இடுகாடும் சுடுகாடும் என்று பிரித்து எழுதி வைத்த பித்தன் யார்? இடுகாடுகளில் இந்த பேதம் என்றால் றடைவதாகச் சொல்லுகின்ற சொர்க்கம் - - இறந்தவர் சென் நரகத்திலும் உயர்ந் என்ற தோருக்கு ஒரு சொர்க்கம்; தாழ்ந்தோர்க்கு ஒரு நரகம் பேதம் வகுத்துக்கூறும் வேதம் ஏதாவது இருக்கிறதா? இதுவரை யில் உங்களிடம் நாங்கள் விடுத்தது வேண்டுகோள்! கேட்டது சலுகை! இனிமேல் விடுப்பது எச்சரிக்கை! கேட்பது உரிமை! அதற்கு முன்பே திருந்திக் கொள்ளுங்கள்! என் தாயின் சவம் செல்ல வேண்டுமென்பதற்காக அல்ல! இனிமேல் எங்கள் தாழ்த் தப்பட்டோர் சவம் செல்வதற்கு என்று தனியாக ஒரு பாதை என்ற கொடுமையை ஒழித்தே தீரவேண்டும். அந்தச் சூளு இதோ பிணமாக இருக்கும் என் அன்புத்தாயின் மீது ஆணையிட்டு நான் மேற்கொள்கிறேன்! உம்! வழிவிடுங்கள்! நந்தகுமாரின் வீர உரை கேட்டு அந்தத் தெருவினர் பணிந்து ரையை - விடவில்லை. கம்புகளும் கழிகளும் ஓங்கப்பட்டன. பெரிய கற்களைத் தூக் கிக்கொண்டு முரட்டு வாலிபர்கள் விழிகளை உருட்டிய வண்ணம் முன்னோக்கிப் பாய்ந்து வந்தனர். பொன்னனும் ஒரு பெருங் கல்லைத் தன் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு முன்னேறினான். சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவருமே அந்தச் சம ருக்குத் தயாராயினர். அந்தச் சமயத்தில் மழை நீரில் நீந்திய வாறு மகேஸ்வரனின் கார் வந்து அங்கே நின்றது. காரின் ஒலி கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர். காரிலிருந்து மகேஸ்வரன் இறங்கி, அஞ்சலையின் பாடை நின்ற இடத்துக்கு வந்தான். அந்தப் பாடையைத் தூக்கி வந்த நாலு வாலிபர்களில் ஒருவனை விலக்கிவிட்டு, அந்தப் பக்கத்துப் பச்சை மூங்கிலுக்கு மகேஸ்வரன் தோள் கொடுத்தான். எல்லோரும் அயர்ந்து போய் திகைப்புற்று நின்றனர். உம்! போகலாம்” என்று கூறிக்கொண்டே மகேஸ்வரன் மற்றவர்களுடன் பாடையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தான் அதே தெருவின் வழியாக. அந்தத் தெருவில் உள்ளவர்கள் எதுவும் பேசாமல் ஒதுங்கி நின்றனர். இடு தெருவைக் கடந்து அஞ்சலையின் சவ ஊர்வலம் காட்டை நோக்கிப் போயிற்று. தெருவில் ஒதுங்கி நின்றவர்களிலே ஒரு பெரியவர், தன் ஆத்திரத்தையெல்லாம் வெளியே கொட்டி, இதை சும்மா விடக்கூடாது!” என்று உரக்கக் கத்தினார். அந்தத் தெருவாசிகள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/76&oldid=1702476" இலிருந்து மீள்விக்கப்பட்டது