பக்கம்:ஒரே இரத்தம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பண்ணையார் வீட்டு வாசலில் பெருங்கூட்டம் கூடி நின் றது. அஞ்சலையின் சவத்திற்குத் தோள்கொடுத்து அந்தத் தெருவின் வழியாகவே மகேஸ்வரன் தூக்கிக்கொண்டு போன போது; திடீரென திடீரென அமைதியாகிவிட்ட அந்தத் தெருவின் ஒரு மூலையிலிருந்து "இதை சும்மா விடக்கூடாது” என்று உரத்த குரல் கொடுத்தாரே; அந்தப் பெரியவர்தான் பண்ணையார் வீட்டு வாசலில் கூடியிருந்தோருக்குத் தலைமை வகித்தார். பண்ணையார் பரமேஸ்வரன்; அவர் பெயருக்கேற்ப நெற் றிக்கண்ணைப் பெற்றிருந்தாரேயானால் அங்கே ஒரு ஓரத்தில் வாயிற்படிகளுக்கும் கீழே தெருவில் நின்றுகொண்டிருந்த மகேஸ்வரனைச் சுட்டெரித்திருப்பார். நெருப்பு மழைக்கிடையே ஒரு மல்லிகை மலர் வாடாமல் வதங்காமல் கொடியில் காட்சி யளிக்கும் விந்தையைப் போல, அந்தச் சூழ்நிலையில் சூழ்நிலையில் மகேஸ் வரன் காட்சியளித்துக்கொண்டிருந்தான். - “உங்க கிட்ட ஒரு மதிப்பு மரியாதை இந்த ஊர்ல உள்ளவங்கள்ளாம் வச்சிக்கிட்டு இருக்கோம்னா அது உங்க ளோட பணம் காசுக்குப் பயந்துகிட்டு இல்லிங்க! நிலம் நீச் சுலே வேலை பாக்கிறோம்கிற அந்த எண்ணத்திலே கூட இல் லிங்க! ஏதோ பெரிய மனுஷன் நாலு பேருக்கு பேருக்கு நல்லவரு ஆச்சார அனுஷ்டானத்திலே கறாரா இருக்கிறவரு! உங்க தெய்வ பக்தியாலயும், சாஸ்திர சம்பிரதாயங்கள்ள நீங்க காட்டுற அலாதி மரியாதையாலயும் இந்த ஊரே ஊரே சுபீட்சமா இருக்கு; அப்படின்னுதான் எங்களுக்கெல்லாம் அய்யா தனி அன்பு! மதிப்பு! அப்படிப்பட்ட வீட்டுப் பிள்ளையே இப் படியொரு காரியத்தை செஞ்சா நாங்க யாருகிட்டப் போயி சொல்றது? உங்க முகத்துக்காகப் பாத்தோம்! இல்லேன்னா, உங்கப் பையன் அந்த அரிஜனப் பிணத்தைத் தூக்கிகிட்டு எங்க தெருவழியாப் போயிருக்க முடியுமா? வேற ஒருத்தரா இருந்தா காலை முறிச்சிருப்போம்! பெரிய ரணகளமே நடந்திருக்கும். ' மேல் அந்தப் பெரியவர் மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தார். “உங்க ஆத்திரம் எனக்குப் புரியுது! உங்க உணர்ச்சிகளை அலட்சியப்படுத்துற அளவுக்கு எனக்கு ஒண்ணும் அகம்பாவம் 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/77&oldid=1702477" இலிருந்து மீள்விக்கப்பட்டது