பக்கம்:ஒரே இரத்தம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பட்டு விடலே! சம்பிரதாயத்துக்கு விரோதமா, ஒரு அக்கிர மம் நடக்கிறதை அனுமதிக்காம நீங்க எல்லாம் சேர்ந்து என் மகனோட காலை முறிச்சிருந்தாலும் நான் அதுக்காக உங்கமேல வருத்தப்பட்டிருக்க மாட்டேன்; கோபப்பட்டிருக்க மாட் டேன். நீங்க செஞ்சது நியாயம்தான்னு சொல்லியிருப்பேன்.' பண்ணையார் உடம்பெல்லாம் வியர்வை வழிந்தது. வர்ணாஸ்ரம தர்மத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட தன் மகனுக்கு அப்படியொரு தண்டனை கொடுப்பதுகூடப் பொருத்தம் தான் என்று அவர் உதடுகள் மட்டும் உச்சரிக்கவில்லை. அவரது உள்ளமே குமுறிக்கொண்டிருந்தது. தான். மகேஸ்வரன், சலனமின்றித் தன் தகப்பனாரைப் பார்த் - - 'அப்பா! இப்போதுகூடக் காலம் தவறிவிடவில்லை. நீங்களே கூட என் காலை முறிக்கலாம்! அல்லது இதோ நிற்கி றார்களே; மனிதாபிமானத்தைக் காப்பாற்ற மறந்து; மதத் தையும், சாதியையும் காப்பாற்றுவதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டு; இவர்களுக்காவது அந்த அனுமதியைக் கொடுங்கள்! என் காலை முறிக்கட்டும் கழுத்தை நெறிக்கட்டும்! ஆனால் ஒன்று என் காலையோ கழுத்தையோ இன்று முறித்து நெறித்துவிடலாம்; எதிர்காலத்தில் அதுவும் கூடியவிரைவில் ஆணவத்தின் கால்களும் மூடநம்பிக்கையின் முது கெலும்பும் - தீண்டாமைக் கொடுமையின் குரல்வளையும் - வெட் டப்பட்டு முறிக்கப்பட்டு, நெறிக்கப்பட்டு - இந்த நாடு உண்மை யான விடுதலையைப் பெறப்போகிற நிகழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! உம்! உத்தரவிடுங்களப்பா ஊரே கூடி வந்திருக்கிறது உங்களிடம் என் மீது வழக்குத் தொடுத்து! தீர்ப்பைச் சீக்கிரம் வழங்குங்கள்; என்னையே தீர்த்துக்கட்டச் சாதி சொல்லி!'• - - - மகேஸ்வரன் அமைதியாகத் தொடங்கி, அனற்பிழம்பெனச் சொற்களைக் கொட்டியது கண்டு பண்ணையார் ஒன்றும் பயந்து விடவும் இல்லை. அவன் மீது பரிவு காட்டுகிற உணர்ச்சியும் கொண்டிடவில்லை. "தீர்ப்பு வழங்கத்தாண்டா போறேன். உன் காலை ஒடிக் கிற தீர்ப்பு அல்ல! இனிமேல் உன் கால் இந்த வீட்ல படக்கூடா துங்கிற தீர்ப்பு! இனி இந்த வீட்டுக்குள்ளே நீ நுழையணும்னா; கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும். அப்படியே கோர்ட்டுக்குப் போயி, உனக்குச் சாதகமாக தீர்ப்பு வாங்கிட்டு வந்துட்டாலும்- நீசனாகிவிட்ட நீதான் இந்த வீட்ல வாழலாம்! ஆச்சார அனுஷ் டானங்களை எங்க ஆத்மாவோட இணைச்சுக்கிட்டிருக்கிற நானும், உங்க அம்மாவும், உன் தங்கை காமாட்சியும் இந்த வீட்ல வாழ மாட்டோம்! என்னடா சொல்றே? என் மேல கேசு போட் கோர்ட்டுக்குப் போறியா? இல்லேன்னா; இந்த அம்பல் கிராமத்து அரிஜனக் காலனியிலேயே நீ ஒரு குடிசை கட்டிக்கிறியா?" 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/78&oldid=1702478" இலிருந்து மீள்விக்கப்பட்டது