பக்கம்:ஒரே இரத்தம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணையார் பேச்சில் தடுமாற்றமில்லை. உறுதியிருந்தது. மகேஸ்வரனின் தாயாரும், தங்கை காமாட்சியும் ஜன்னல் வழி யாகத் தெரு வாசலில் நடைபெறும் அந்த உத்வேகமான வாக்கு வாதத்தை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மகேஸ்வரன், தன் தந்தையின் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் கலகலவெனச் சிரித்துவிட்டான். நான் வக்கீல் தொழில் பார்த்துச் சென்னையில் வாங்கிய வீடு இருக்கிறது. இதோ இந்தக் கார் எனக்குச் சொந்தமான கார். உங்கள் மீது வழக்குப் போட்டு இந்த வீட்டின் உரிமையைப் பெறவேண்டுமென்று நான் அலையப் போவதில்லை! என்றாலும் எனக்கு ஒரு தண்டனை விதித்தீர்களே; அரிஜனக் காலனியில் குடிசை போட்டுக்கொண்டு வாழச் சொல்லி; அந்தத் தண் டனையை நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன். இன்றைக்கே குடிசை போடும் வேலையை ஆரம்பிக்கிறேன். வருகிறேன்; ஊர்ப் பெரியவர்களே! வணக்கம்.' இவ்வாறு கூறிவிட்டு மகேஸ்வரன், தன் காரின் முன்பகுதி யில் போய் அமர்ந்து காரை ஓட்டுவதற்குத் தயாரானான். ஜன்னலருகே நின்றுகொண்டிருந்த பார்வதியம்மாளும் காமாட்சியும் பதறிப்போய் வெளியே ஓடி வந்தனர். " 'நில்லுங்க! எங்கே போறீங்க?" என்று பண்ணையார் போட்ட கூச்சலில் இருவரும் அப்படியே நடுநடுங்கித் தெரு வாயிற் படியிலேயே நின்றுவிட்டனர். மகேஸ்வரன் அவர்களைப் பார்த்துவிட்டுக் காரிலிருந்து இறங்கி வந்தான். சற்றுத் தொலைவில் நின்றுகொண்டே, காமாட்சியிடம் சொன்னான்: "இன்றோ நாளையோ சென்னையிலிருந்து சோமுவும் வேணி யும் வருவார்கள். வந்தால் நாலு நாள் தங்குவார்கள். ஒருவேளை என் நண்பன் என்பதற்காக சோமுவையும் அவன் மனைவியையும் விரட்டிவிடாதீர்கள். வேணி, உன் தோழி என்பதற்காகவாவது வீட்டில் இடம் கொடுங்கள்.” காமாட்சி பதில் கூறாது நின்றாள். அவளுடைய பதிலை எதிர் பார்க்காமலே மகேஸ்வரன், காரில் ஏறிப் புறப்பட்டான். பண்ணை யார், காற்றின் அசைவே இல்லாத இடத்தில் இருக்கும் மரம் போல நின்றுகொண்டிருந்தார். பார்வதியின் கண்கள் கலங்கி யிருந்தன. காமாட்சி, அண்ணனின் கார் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஊரார், ஒவ்வொருவராகப் பண்ணை யார் வீட்டு வாசலை விட்டு நகர்ந்தார்கள். எந்தவிதக் கலக்கமுமின்றி காரை மெதுவாக ஓட்டிச்சென்று கொண்டிருந்த மகேஸ்வரன், சாலையோரத்து சிறிய மதகு ஒன்றில் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த நந்தகுமாரை க் கண்டதும் காரை நிறுத்தினான். 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/79&oldid=1702479" இலிருந்து மீள்விக்கப்பட்டது