பக்கம்:ஒரே இரத்தம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஏன் வீட்டுக்குப் போகாம இங்கே உட்கார்ந்திருக்கிறே? 'வீட்டிலே, அக்கா ஒரே அழுகை! அப்பா - முழங்காலைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கார். அண்ணன் திண்ணையிலே படுத்து அம்மா நினைப்பிலே கண்ணீர் வடிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கு அங்கே நிம்மதியில்லை. அதான் இப்படித் தனியா வந்து உட்கார்ந்திருக்கேன்.!” "சரி! சரி! வீட்டுக்குப் போயி அவுங்களை சமாதானப்படுத்து! நந்தகுமார்! எனக்காக ஒரு உதவி செய்யணும்; முடியுமா னால்? உன் நந்தகுமார், அன்பு உணர்ச்சி பொங்கிட மகேஸ்வரனிடம் சொன்னான்; "எந்த உதவியும் செய்யத் தயார்!' என்று! € - “விவரமெல்லாம் எதுவும் கேட்காதே! நான் சிதம்பரம் போகிறேன். என்னுடைய நண்பன் ஒருத்தன் வர்ரான்; அவனை அழைக்கிறத்துக்காக! அநேகமாக நாளைக்குத் திரும்பிடுவேன். அதுக்குள்ளே, உங்க காலனிக்குப் பக்கத்திலே எனக்கு ஒரு தனிக் குடிசை கட்ட ஆரம்பிக்கணும். இந்தா பணம் ஆரம்பச் செல வுக்கு வச்சுக்க! பாக்கிப் பணத்தை அப்புறம் தர்ரேன். ரொம்ப சின்னக் குடிசை!... சிக்கனமா இருந்தாப் போதும்! என்ன திகைக் கிறே? ஏன் அப்படி முழிக்கிறே? ஊருக்குள்ளே போனீன்னா எல்லா விவரமும் உனக்குத் தெரியும். அதனால என்கிட்ட விளக்கம் கேட் காதே! உடனே வீட்டு வேலையைத் தொடங்கிடு! நான் வர்ரேன்.' இவ்வாறு சொல்லிக்கொண்டே நந்தகுமாரை எதுவும் பேசவிடா மல் செய்துவிட்டு, காரில் ஏறி வேகமாக மகேஸ்வரன் புறப்பட் டான். நந்தகுமாருக்கு உடனடியாக எதுவும் புரியவில்லையென்றா லும் ஊருக்குள்ளே சென்று விசாரித்ததும் பண்ணையார் வீட்டில் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் அறிந்துகொள்ள முடிந்தது. தானும் தன்னுடைய இறந்துபோன தாயாரும் மகேஸ்வரனின் வாழ்வுக்கே இடையூறாக ஆகிவிட்டோமேயென்று அவன் மிகுந்த கவலை கொண்டான். வீட்டுக்குச் சென்று, மகேஸ்வரனை ஊரார் எதிர்த்துப் பண்ணையார் வீட்டில் புகார் செய்ததையும், அதன் விளைவாக அவன் அரிஜனக் காலனியில் குடிசை போட்டுக் குடியிருக்கத் தீர் மானித்துவிட்டதையும் தந்தையிடமும் அண்ணனிடமும் விவ ரித்தான். அருகிருந்து கேட்டுக்கொண்டிருந்த செங்கமலத்தின் உள்ளம் படபடத்தது! மகேஸ்வரனின் வாழ்க்கையில் னுடைய பங்கு; அவனை எந்த அளவுக்குப் பாதிக்கப்போகிறதோ என எண்ணி அவள் துடித்துக்கொண்டிருந்தாள். மகேஸ்வரனின் விருப்பப்படியே குடிசையொன்றை அமைக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி, நந்தகுமாரிடமிருந்து பொன்னன் பணத்தைப் பெற்றுக்கொண்டான். 80 தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/80&oldid=1702480" இலிருந்து மீள்விக்கப்பட்டது