பக்கம்:ஒரே இரத்தம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்த ஆறு ஓடக்கூடிய அளவுக்குப் பெருங்கலகம் நடந் திருக்க வேண்டிய நிலைமையை ஒரு நொடியில் மாற்றியது மட்டு மல்லாமல், தன் தாயாரின் சவத்தையும் தன் தோளில் தூக்கிக் கொண்டு இடுகாடு வரையில் நடந்து வந்த மகேஸ்வரனின் பெரிய உள்ளத்தைப் பொன்னனால் மறக்க முடியவில்லை. இன்றைக்கே அந்தக் குடிசை அமைப்பதற்கான வேலைகளை மேற்கொள்வதாகத் தம்பியிடம் கூறிவிட்டு அவன் புறப்பட்டான். சோமுவும் வேணியும், தன்னிடம் தொலைபேசியில் தெரி வித்தவாறு சிதம்பரத்திற்கு விடியற்காலை வந்து சேரும் ரயிலில் நிச்சயம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு மகேஸ்வரன், சிதம்பரம் ரயிலடியில் காத்திருந்தான். அன் எதிர்பார்த்தவாறு இருவரும் வந்து சேர்ந்தார்கள். புடன் வரவேற்ற மகேஸ்வரன் அவர்களைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு, சிதம்பரம் பயணிகள் விடுதியொன்றுக்குச் சென்றான். சோமு, வேணி இருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட அறை யில் அவர்களைத் தங்கச் சொல்லிவிட்டுத் தான் பக்கத்து அறையில் ஓய்வெடுப்பதாகக் கூறி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டான். "எல்லாம் காலையில் தாங்கள் அவ்சரமாக அழைக்கப்பட்ட காரணத்தை அறிந்துகொள்ள சோமு விரும்பினா பேசிக்கொள்ளலாம். முதலில் ஓய்வு எடுங்கள் என்றவாறு அவர்களின் அறைக் கதவைச் சாத்திவிட்டு, மகேஸ்வரன் தனது அறைக்குச் சென்றான். 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/81&oldid=1702481" இலிருந்து மீள்விக்கப்பட்டது