பக்கம்:ஒரே இரத்தம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேணி சொல்லி முடிப்பதற்குள் சோமுவும் மகேஸ்வர னும் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். வேணியும் சிரித்தாள். மகேஸ்வரனும் சோமுவும் காரில் புறப்பட்டனர். சிதம்பரத்தின் சில தெருக்களைக் கடந்து, அவர்களது கார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நோக்கிச் சென்றது. - அதோ அந்த உயர்ந்த பீடத்தில் கம்பீரமாக நிற்கும் இளைஞனின் சிலை! கண்ணுக்கு நிகரான தமிழ் மண்ணின் மொழி காக்கவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து விரட்டவும் 1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப் புரட்சியின்போது காவல்துறையினர் பொழிந்த துப்பாக்கிக் துப்பாக்கிக் குண்டுகளை குண்டுகளை மலர்ச் செண்டுகளாக மார்பிலே ஏந்திக்கொண்டு தமிழன்னையின் மடி யிலே சவமாகச் சாய்ந்தானே மாணவன் இராஜேந்திரன்; அந்த வீர சிங்கத்தின் சிலைதான் அது! மகேஸ்வரன் அந்தச் சிலையருகே காரை நிறுத்தி இறங்கி னான். சோமுவும் இறங்கினான். சிலையின் பீடத்தில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களின் மீது இருவர் விழிகளும் மொய்த் தன பின்னர் அந்த இளந் தமிழனின் சிலையை வணங்கினர். பிற மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழி காக்கவும், தமிழையும் இந்தியத் துணைக் கண்டத்து மத்திய ஆட்சி மொழி களில் ஒன்றாக்கவும் இன்னும் எத்தனை பேர் இப்படிச் சிலையாக வேண்டுமோ? நினைவுச் சின்னங்களாக வேண்டுமோ? இருவர் இதயத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்தன. மதப்பற்று காரணமாக புத்த பிட்சுக்கள் வியட்நாமில் தீக் குளித்து மாய்ந்த வரலாறு உண்டு. ஆனால் மொழிப் பற்றின் காரணமாக எட்டு பேர் தங்கள் தளிர் மேனிக்குத் தீயிட்டுக் கொண்டு உடல், பாளம் பாளமாக வெடிக்கவும் - கரிக்கட்டையாக மாறவும் கேசம் எரிந்திடவும் - முத்துப் பற்கள் படார் படார் எனச் சிதறிடவும் எலும்புக்குள்ளும் எரிதழலின் சூடேறவும் அந்த நிலையிலும் “தமிழ் வாழ்க! இந்தி ஆதிக்கம் வீழ்க!” என முழக்கமிட்டுச் சாம்பலாக மாறிய வரலாறு இந்தத் தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமன்றோ! - - கம - இருவரின் மௌனத்திலும் ந்த எண்ணங்களே சோக மாகச் சிறகசைத்தன. மீண்டும் காரில் ஏறிக்கொண்டனர். சிறிது தொலைவு சென்றதும் ஒரு பெரிய மரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு மகேஸ்வரன், சோமுவின் முகத்தைப் பார்த்தான். 'என்ன மகேஸ்வரா? உனக்கு என்ன நடந்துவிட்டது? சோமுவின் விழிகள் அன்போடு வினா எழுப்பின. என் சோமு! நீயும் வேணியும் நாலைந்து நாட்கள் கிராமத்தில் வீட்டில் தங்குகிறீர்கள். என் தங்கை காமாட்சியிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நான் உங்கள்கூட இருக்க முடியாது. ஆனால் கிராமத்தில்தான் இருப்பேன். என் தங்கை யின் வாழ்வில் ஒளிந்து கிடக்கும் ரகசியத்தை; நானே அவளிடம் 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/83&oldid=1702483" இலிருந்து மீள்விக்கப்பட்டது