பக்கம்:ஒரே இரத்தம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரில் கேட்பது இயலாத காரியம்; அண்ணன் என்பதால்! அதற் காகத்தான் வேணியை அழைத்து வா என்று உன்னை வேண்டிக் கொண்டேன்... 'அதுதான் அழைத்துக்கொண்டு யத்தைச் சொல்லேன்!” வந்துவிட்டேனே; விஷ 'என் தந்தை செய்த தவறு – அவர் என் தங்கை காமாட்சி யின் வாழ்வில் அக்கறை காட்டாத கொடுமை அதன் விளைவு, அவளாகவே ஒரு காதலைத் தேடிக்கொண்டுவிட்டாள். - ‘நல்லதாய்ப் போயிற்று. அவனுக்கே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டியதுதானே!” "அந்தக் காதலன் யார்? அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே சோமு! "காமாட்சியைக் கேட்டால் சொல்லிவிட்டுப் போகிறாள். எத்தனையோ சீர்திருத்தம் பேசுகிறாய் நீ! இதைக்கூட உன் தங்கை யிடம் கேட்டறிந்து அப்பாவிடம் வலியுறுத்தி, அவள் இஷ்டப் பட்டவனுக்கு மாலையிடச் செய்ய முயற்சி செய்திருக்கக்கூடாதா?' 66 அதை அவளிடமே அறிந்துகொள்ளத்தான் நினைத் தேன். அதற்குள் என் நெஞ்சில் ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டிவிட்டதப்பா!” அது ‘என்ன மகேஸ்வரா சொல்லுகிறாய்? ‘‘வயலில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து வந்து அதற்குத் தோஷம் கழிக்கப் பெரிய பூஜையெல்லாம் செய்து; தெய்வக்குழந்தையென்று வீட்டில் வளர்க்க ஆரம்பித்தார் அப்பா! அந்தக் குழந்தைக்கு இரவு நேரத்தில் காமாட்சி, தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியை என் கண்களா லேயே பார்த்து விட்டேன்.” சோமு குழப்பமடைந்தான். மகேஸ்வரனின் எப்படியிருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது அவனால். மனோநிலை தன்னிடம் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தால், குடும்ப கெளரவத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிடக்கூடிய ஒரு செய்தியை மகேஸ்வரன் கூறியிருப்பான் என்பதை நினைத்து நெகிழ்ந்து போனான் அவன்! மாக 'காமாட்சி ஒளித்து வைத்திருக்கும் ரகசியத்தை நிச்சய என்னிடம் வெளியிட முடியாது! என்னதான் நிலை தடு மாறித் தவறிவிட்டவளாக இருந்தாலும், தன் நம்பிக்கைக் குரிய ஒரு பெண்ணிடம்தான்; அதுவும் வேணியிடம்தான் திறமை முழுவதை உண்மையை அறிய வேண் சொல்ல முடியும். வேணி, தன்னுடைய யும் காட்டி, காமாட்சியிடமிருந்து டும். அப்போதுதான் அவள் வாழ்க்கையை வகைப்படுத்த முடி யும். வேணிக்கு விஷயம் தெரிந்துவிட்டால் 84 அதை நீ கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/84&oldid=1702485" இலிருந்து மீள்விக்கப்பட்டது