பக்கம்:ஒரே இரத்தம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னிடம் விளக்க முடியும். இப்படியெல்லாம் திட்டமிட்டுத் தான் உங்களிருவரையும் வரவழைக்கத் தீர்மானித்தேன். "கவலைப்படாதே மகேஸ்வரா! உனக்கு இந்த உதவியைக் கூடச் செய்யாமல் நாங்கள் எதற்காக இருக்கிறோம்? சரி, வா! போக லாம்! அதிருக்கட்டும்; உனக்கொரு வாழ்க்கைத் துணைவியைத் தேடிவிட்டதாக வேணியிடம் சொன்னாயே; யார் அது? “உனக்குச் சொல்லாமலா இருப்பேன்? காரிலேயே பேசிக் கொண்டு போகலாம். சோமு! இன்னொரு நல்ல செய்தி! நான் கிராமத்தில் அரிஜனக் காலனியில் எனக்காக ஒரு குடிசை போட்டு அதில் குடியிருக்கப் போகிறேன்!” “என்னடா! எல்லாம் ஒரே புரட்சியாக இருக்கிறது! அந்த ரகசியத்தை நீ என்னிடம் சொல்லவில்லையே!' "OUT! OUT! அது பெரிய கதை! கார் ஓட்டிக்கொண்டே அந்தக் கதையைச் சொல்லுகிறேன். காதல் கதையா இருக்கும்! நான் காரை ஓட்டுகிறேன். நீ கதையைச் சொல்லிக்கொண்டு வா!" மகேஸ்வரன், காரின் முன்பகுதியில் உட்கார்ந்துகொண்டு அவன் கதையை ஆரம்பித்தான். சோமு, காரை கொண்டு போனான். ஓட்டிக் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்வதற்கும் மகேஸ் வரன் கதை முடிவதற்கும் சரியாக இருந்தது. சோமுவின் முகத்தில் ஒரு உறுதியும், தன் நண்பனுக்காக ஆற்ற வேண்டிய பணி குறித்து ஒரு தீர்மானமும் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வேணி! நாம் இருவரும்தான் காரில் போகிறோம். மகேஸ்வரன் நம்முடன் வரவில்லை. அவன் இரண்டு கழித்துத்தான் கிராமத்துக்கு வருவதாக இருக்கிறான்.' நாள் சோமு, கண்ணாடிக்கு முன் நின்று தலையை வாரிக்கொண்டே இந்த செய்தியை வேணியிடம் சொன்னதும், காரணத்தை அறிந்து கொள்ள வேணி விரும்புகிறாள் என்பதை அவள் முகம் அறிவித்தது! 'ஒரு வரியில் எதையும் சொல்லிவிட முடியாது! மகேஸ் வரனின் காரில் நாம் இருவரும் இப்போது புறப்படுகிறோம். நீ கேட்டறிய வேண்டிய செய்திகளும், சாதிக்க வேண்டிய செயல்களும் நிறைய இருக்கின்றன. பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு உடனே புறப்படலாம். போகும் வழியில் உன்னிடம் சொல்ல ஒரு புதிய புராணமே இருக்கிறது!'’ இருவரும் தயாரானார்கள். மகேஸ்வரன், சோமு, வேணி யைக் காரில் வழியனுப்பி வைத்துவிட்டுத் தனது அறைக்குள் நுழைந்தான். தலையைக் கிறுகிறுவென்று சுற்றுவது போலிருந் தது. நிதானித்து நிற்க முயன்றான். முடியவில்லை. படுக்கையில் விழுந்தான். இரு விழிகளிலும் நீர்க்கோடுகள் தோன்றி காதின் மடல்கள் வரை நீண்டுகொண்டிருந்தன. 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/85&oldid=1702486" இலிருந்து மீள்விக்கப்பட்டது