பக்கம்:ஒரே இரத்தம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரத்திலிருந்து அம்பல் கிராமம் வரையில் சோமு விவரித்த திடுக்கிடும் நிகழ்ச்சிகளையும், சோகச் செய்திகளையும் கேட்டு; வேணியின் இருதயம் கனத்துப் போயிருந்தது. தன் னெதிரேயுள்ள பணியைப்பற்றிய கவலையும் அவளை முற்றுகை யிட்டுத் திணறச் செய்துகொண்டிருந்தது. பண்ணையார் பரமேஸ்வரன் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. மகேஸ்வரனின் கார் ஆயிற்றே என்ற வெறுப் புடன் பண்ணையார் காரைக் கவனித்தவாறு; “மீண்டும் வந்து விட்டானா பாவி!" என முணுமுணுத்தபடி ஆத்திரத்துடன் எழுந்தார். சோமுவும் வேணியும் இறங்கி வந்து பண்ணையாருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். பண்ணையாரும், விருந்தினர்களை உபசரிக்கும் பண்புடன் மகிழ்ச்சி நிரம்பிட அவர்களை வரவேற் றார். வேலையாளை விட்டு, காரில் உள்ள காரில் உள்ள பெட்டி பெட்டி படுக்கைகளை வீட்டுக்குள் கொண்டுபோய் வைக்கச் சொன்னார். ‘காமாட்சி! பார்வதி! யார் வந்திருக்காங்க, வந்து பாருங்களேன்!" என்று உள்ளே திரும்பி குரல் எழுப்பினார். பார்வதியும், காமாட்சியும் ஆவலுடன் வாயிற்புறம் வந்தனர். காமாட்சி, வேணியைக் கட்டித் தழுவி வரவேற்றாள். அந்த வரவேற்பில் அவர்களது பாசப் பிணைப்பு மலர்ந்து மணம் பரப்பியது. பார்வதியின் கையில் குழந்தையிருந்தது. சோமு, அந்தக் குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடி னான். சோமுவின் கண்களை வேணியின் கண்கள் வேண்டிக் கொண்டன; விவரம் எதுவும் கேட்டுவிடவேண்டாமென்று! பண்ணையாரோ அந்தக் குழந்தை வயலில் கிடைத்த விவரத்தை உற்சாகத்தோடு சொல்லி; "இது ஒரு தெய்வக் குழந்தை!' என்று பாராட்டிக்கொண்டே பார்வதியின் கையிலிருந்த குழந்தையை வாங்கித் தன் முகத்தோடு முகம் ஒத்திக் கொண்டார். காமாட்சியை வேணி, கடைக்கண்ணால் நோக்கினாள். காமாட் சியின் அழகு வதனத்தில் அவளாலேயே மறைக்க முடியாமல் ஏற் பட்ட அந்த மாறுதலை வேணி, தன் பணிக்கெனக் குறித்து வைத்துக் கொண்டாள். "எல்லாம் உள்ளே வாங்க! முதல்ல காப்பி ஏதாவது சாப்பிடலாம்" ஆர்லிக்ஸ் என்று பார்வதியம்மாள் அழைத்ததையேற்று சோமுவும் வேணியும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். குழந்தையை அணைத் துத் தூக்கியவாறு பண்ணையாரும் அவர்களைப் பின்தொடர்ந்து உள்ளே போனார். ஆடம்பரமும், அலங்காரமும் நிறைந்த கூடத்துச் சோபாக் களில் எல்லோரும் அமர்ந்தனர். அந்த வீட்டில் தனக்கிருக் கும் மிக முக்கியமான வேலையை நினைத்து வேணி, பெருமூச்சு விட்டுக்கொண்டாள். 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/86&oldid=1702487" இலிருந்து மீள்விக்கப்பட்டது