பக்கம்:ஒரே இரத்தம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அம்ப ம்பல் கிராமத்து அரிஜனக் காலனியில் ஒரு மூலையில் கிடந்த காலி நிலத்தில் மகேஸ்வரனுக்காகக் குடிசை அமைக் கும் வேலையில் பொன்னனும், நந்தகுமாரும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு அந்தச் சிறிய ஓலை வீட்டை அமைத்து முடித்தனர். ம் இரண்டொரு நாட்களில் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்ற மகேஸ்வரன், கிராமத்தில் தனக்கென ஒரு குடிசை கட்டி முடியும் வரையில் சிதம்பரத்திலேயே தங்கியிருப்பது சரியென்று. கருதினான். தான் புற சென்னையில் தனது வழக்குரைஞர் தொழிலைச் சிறப் நடத்திக்கொண்டிருந்தவன், கிராமத்துக்குச் சென்று பெற்றோர்களைப் பார்த்துவிட்டு, உடனடியாகச் சென்னைக்குத் திரும்பலாம் என்று வந்தவன்; எத்தனை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியவனாகிவிட்டான்! நந்தகுமார், நடுவழியில் தாக்கப்பட்டபோது அவனைக் காப்பாற்றப் போய் அதன் தொடர்பாகச் செங்கமலத்தைச் சந்திக்க நேரிட்டது. அந்த முதல் சந்திப்பு எங்கேயோ முடிந்து, திருமணம் செய்துகொண்டால் ஒரு அரிஜனப் பெண்ணைத் தான் செய்துகொள்வேன் என்று சபதம் மேற்கொள்ளவும் முன்வந்தான். அதைவிடப் பெரும் சிக்கல் சிக்கல் ஒன்று ஒன்று அவனைத் திணற வைத்தது. அதுதான் அவனது தங்கை விவகாரம்! இதற்கிடையே எழுந்த சாதிப் ஆத்திரம்! ஊரார் எதிர்ப்பு! அரிஜனக் போட்டுக்கொண்டு வாழ்வேன் என்று விடுத்த அறைகூவல்! காமாட்சியைப் பற்றிய பூசல்கள்! தந்தையின் காலனியிலேயே குடிசை தந்தையின் முன்னால் உதவிக்கு அழைக்கப்பட்ட சோமு, வேணி இருவரையும் நம்பி ஒப்படைத்துள்ள வேலை! இத்தனைக் காரணங்களாலும் அவன் சில நாட்கள் சென்னையை மறந்துவிட்டு அம்பல் கிராமத்திலேயே அலைய வேண்டியவனாகிவிட்டான். 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/87&oldid=1702488" இலிருந்து மீள்விக்கப்பட்டது